பக்கம்:ஒரே உரிமை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஒரே உரிமை

“தேவலையே, அவ்வளவு தூரம் நீ படித்திருக்கிறாயா?”

“எல்லாம் அந்தக் காந்தி வாத்தியாரு புண்ணியமுங்க!”

“அது யார், காந்தி வாத்தியார்?”

“அவர் இப்போ செத்துப் பூட்டாரு! நல்லவரு, பாவம்! அவரு, காந்தி எங்க எனத்தவரை யெல்லாம் முன்னுக்குக் கொண்டாரச் சொல்றாருன்னு சேரிக்கு வந்து, எங்களுக்கெல்லாம் படிப்புச் சொல்லிக் கொடுப்பாருங்க! நாங்க அவரை ‘காந்தி வாத்தியாரு, காந்தி வாத்தியாரு’ன்னுதான் கூப்பிடுவோமுங்க!”

“ஓஹோ!-சரி, நான் ஒன்று சொல்கிறேன். கேட்கிறாயா?”

“கேட்காம என்னங்க?”

“இந்த அறுவடை வேலை முடிந்ததும் நீ வேலைவெட்டி கிடைக்கவில்லையே என்று பழையபடி எச்சில் இலைக்கு நாயுடன் வந்து நிற்காதே! நான் உனக்கு ஒரு கடை வைத்துத் தருகிறேன்.”

“என்ன கடைங்க?”

“ரொட்டி, மிட்டாய் எல்லாம் லாபத்துக்கு வாங்கி விற்கிறது.........”

“ஐயய்யோ! இதென்ன கூத்துங்க! எங்கேயாச்சும் பறப் பயல்.........”

“என்னடா, அப்படிச் சொல்கிறாயே! அதெல்லாம் அந்தக் காலம். இப்போது பார்த்தாயா, உங்களுக்குக் கோயிலைத் திறந்து விடுகிறார்கள்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/16&oldid=1145537" இலிருந்து மீள்விக்கப்பட்டது