பக்கம்:ஒரே உரிமை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தேற்றுவார் யார்?

சாயந்திரமானால் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனவர்கள், ரூபாய்க்குக் காலணா வீதம் ஒன்றே காலணா வட்டியும் அசலில் இரண்டரை அணாவுமாகச் சேர்த்து மூன்றே முக்காலணா கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும். பத்து ரூபாய் வாங்கியவர்கள் வட்டி இரண்டரை அணாவும் அசலில் ஐந்தணாவுமாகச் சேர்த்து ஏழரை அணா கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும். முப்பத்திரண்டு நாட்கள் இவ்வாறு கொடுத்து வாங்கும் கடனை அடைத்த பிறகு மீண்டும் வந்து வழக்கம்போல் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு போகலாம். தினசரி தங்கள் வியாபாரத்தில் அவர்களுக்கு லாபம் வந்தாலும் சரி, வராமல் போனாலும் சரி– மேற்கூறிய சட்ட திட்டங்களை ஒருவரும்– ஒரு நாளும் மீறவே கூடாது. தவறினால் தலை போனாலும் பரவாயில்லையே– ‘கவலை விட்டது!’ என்று அந்த அங்காடிக் கூடைக்காரர்கள் நினைத்துக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல் தரித்திரம் அவர்களை விட்டுத் தொலைத்துவிடும் பிழைப்பே போய்விட்டால்..? பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழி?

***

ன்று அம்மாயி வழக்கத்துக்கு விரோதமாகக் கொஞ்சம் நேரம் கழித்து வந்தாள். எப்பொழுது போனாலும் தர்மராஜா இல்லை என்று சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை அவளுக்கு!– ஆமாம், நாயுடுகாருவிடம் கடன் வாங்கும் அங்காடிக் கூடைக்காரர்கள் அத்தனை பேரும் அவரை ‘தர்மராஜா’ என்றுதான் மனமார வாயார வாழ்த்தி வந்தனர்.

‘தர்மராஜா’ என்பதற்காக எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் நாயுடுகாரு சும்மா இருக்க முடியுமா, என்ன? சரக்கு மோசமாயிருந்தாலும் செட்டியார் மிடுக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/72&oldid=1149003" இலிருந்து மீள்விக்கப்பட்டது