உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 111 சித்:- ஆசைக் காதலனைக் காட்டிக்கொடுத்தவளின் அலங் கோலம். தாய் நாட்டுக்காகப் பதிபக்தியைத் தியாகம் செய்த வளின் தவக்கோலம். புத்த:- நீங்கள் எங்கும் போகவேண்டாம். அரண்மனை யிலேயே சுகமாயிருக்கலாம். சித்:- சுகம்! என் சுகத்திற்காகக் கவலைப்பட்டவரின் சுகத் தையே அழித்தேன். இனிமேலா எனக்குச் சுகம்? இனி, இந்த வாழ்க்கையில்தான் சுகம். புத்த:- கவலைப்படாதீர்கள் கணவனைக் காட்டிக்கொடுத்த நேரத்தில், இந்த நாட்டைக் காப்பாற்றினீர்கள். ஒரு விபீஷ ணன் உங்களைச் சபிப்பான். இன்பபுரியின் எதிர்காலச் சந்ததி கள் உங்களை வாழ்த்தும். சித்:- இளவரசே! பெண்கள் சமுதாயம் "புருஷனைக் காட்டிக்கொடுத்தவள், காட்டிக் கொடுத்தவள்" என்று தலை முறை தலைமுறையாக என்னைத் தூற்றும். அதற்கு இதுதான் பிராயசசித்தம். புத்த:- அப்படியானால் தலைநகரிலேயே நீங்கள் தங்கு வதற்கு, ஒரு இடம் அமைத்துத் தருகிறேன். க. சித்:- சந்நியாசி வேஷத்தில் ஊரை ஏய்ப்பவர்களுக்கல் லவா உட்கார்ந்துகொள்ள ஒரு இடம் வேண்டும்! என் மன அலைகள் குமுறிக்கொண்டிருக்கும் வரையில், இப்படி அலைந்து கொண்டிருக்கிறேன். இளவரசே! ஒரு வேண்டுதல் உங்கள் இருவரையும் ஒன்று சேர்க்க ஓயாது கஷ்டப்பட்டவள் குமரி, அவள் மரணப் படுக்கையில் கிடக்கிறாள். அவளை மறந்து விடாதீர்கள். (பாடிக்கொண்டே செல்லல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/113&oldid=1702744" இலிருந்து மீள்விக்கப்பட்டது