உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 113 புத்:- ஒரே பிரச்சினை. அதற்கு இரண்டு முறை.தந்தையே! சட்டம், நியாயம் இரண்டுக்கும் தொடர்பு இருப்பதுதானே ஆட்சி? மகா:- உனக்காகச் சட்டத்தை மாற்றிஅமைப்பதை,சுய நலம் என்று உலகம் சொல்லும். புத்:- இல்லை. என் காதல், சமத்துவப் பாதைக்கு ஒரு கைகாட்டியாக அமையும். உளுத்துப்போன வழக்கங்களைக் கட்டியாளும் உலகத்தினர்க்கு ஒரு உயர்ந்த வழி வகுக்கும். றக மகா:- நீ விரும்புகிற கலப்புமணம் உன் மகுடத்திற்குத் தடையாக நிற்கும். நாட்டை ஆளவேண்டியவன் நீ! கேவலம்,. ஒரு பெண்ணுக்காக முடி இழப்பதா? புத்:- முடி! காதல் சுதந்திரம் பெறமுடியாத எனக்கு ஏன் முடி? அரசே! இதை என் தன்னலம் என்பீர்கள். இல்லை! ஒரு பெண்ணைத் தவிக்க விட்டுவிட்டு இந்தப் பேரரசுக்கு முடிசூட் டிக் கொள்வதுதான் தன்னலம். சிம்மாசனத்திற்காக என் சிந் தையில் குடியேறியவளை விலக்கினால், இந்த உலகம் உள்ளள வும் தூற்றும். மகா: அப்படியானால்...? புத்:- காதலுக்காக... மகுடத்தை தியாகம் செய்கிறேன். மகா:- யோசித்துப் பார். மக்களுக்காக உழைக்கிறேன் என்ற உன்கொள்கை, ஒருமங்கைக்காகத் தவிடுபொடியாகிறது. புத்:- மன்னனாக இருந்துதான் மக்கள் தொண்டு ஆற்ற வேண்டுமென்று சட்டமில்லை. ஒரு கூலிக்காரனாக இருந்துகூட அந்த வேலை செய்யமுடியும். மகா: அப்படியானால் மகுடமிழக்க மனந்துணிந்து விட் டாயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/115&oldid=1702746" இலிருந்து மீள்விக்கப்பட்டது