உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 47 சித்ரா:- என்ன செய்வது? என் தலையில் கடவுள் அப்படி எழுதிவிட்டான். . (சித்ரா மடுக்கிறாள். வெளியே புத்தனும் வீரர் களும்) 1-வது வீ:- எனக்கென்னமோ சந்தேகமாயிருக்கிறது. குமரி:- சந்தேகத்திற்கு அவசியமில்லை. (குமரி வருகிறாள்) புத்த - வெடிமருந்துச் சாலையில் நெருப்புக்கு இடந்தரு வது தவறு. குமரி:- நீரை நெருப்பு என்கிறீர்கள். (சித்ரா படுக்கையை விட்டு எழுந்து கேட்டல்) - 0 புத்த:- நீர் - நெருப்பு, இரண்டுமே வெடிமருந்துக்கு விரோதிகள்தான். 1-வது வீ:- என்ன இருந்தாலும் விபீஷணன் மனைவிதானே? குமரி:- விபீஷணன் விஷப்பொய்கை. சித்ரா அன்பு ஊற்று. (உள்ளே) சித்ரா:- (தனக்குள்) இவள் நம்பிக்கையில் கல்லைப் போடுவதா? பாவம், மாசற்ற மல்லிகை மலர். விபீஷணன் குரலும் நிழலும்:- "ஆம் மலரைக் காப்பாற்றினாய், மணவாளனைக் காட்டிக் கொடுத் தாய்." சித்ரா:- இல்லை. என் அன்பரைக் காட்டிக்கொடுக்க மாட்டேன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/49&oldid=1702655" இலிருந்து மீள்விக்கப்பட்டது