உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. போட்டிக்கு முன்னே !


ஒலிம்பிக் பந்தயம் தொடங்குவதற்குள், கிரேக்க நாடே சுறுசுறுப்படைந்துவிடும். பந்தய மைதானத்தில் பொதுமக்கள் புகுந்து, தங்கள் இடத்தை அடைந்து, பரபரக்கும் விழிகளோடு, துறுதுறுவென்று அமர்ந்திருப்பார்கள். அவர்கள் குறுகுறுத்த விழிகளிலே சிக்கிய வீரர்களுக்கு, ஒலிம்பிக் பந்தய அதிகாரிகளும், வீரர்களின் பெற்றோரும், உடன் பிறந்த சகோதரர்கள் அனைவரும், சியஸ் பீடத்தின் முன்னே அணிவகுத்து நின்று கொண்டிருப்பார்கள். ஆமாம். பந்தயம் தொடங்குவதற்கு முன் அழகான அணிவகுப்பு கடவுள் பீடத்தின் முன் கவின்பெற நடக்கும். அத்தனை பேரும் வீர சபதம் எடுத்துக் கொள்வார்கள்.


சியஸ் பீடத்திலே. பன்றி ஒன்று பலியிடப்படும் . பன்றியின் ரத்தத்தைத் தொட்டு, பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள், முதலில் உறுதி கூறுவார்கள். அதாவது, "நாங்கள் எல்லோரும் கலப்பற்ற தூய கிரேக்கர்களே ! பங்தயத்திலே போட்டியிடுவதற்காக பத்து மாதம் உரிய பயிற்சிகளை உண்மையோடு செய்திருக்கிறோம். போட்டியிட வந்திருக்கும் நாங்கள். போட்டியிலே வெற்றி பெறுவதற்காக விரும்பி எந்தவிதக் கீழ்த்தரமான செய்கைகளையும், முறைகளை

பும் பின்பற்றமாட்டோம்”

உடலாளர்களான வீரர்கள் மட்டும்தான் உறுதி எடுப்பார்களா, கடவுள்முன் சத்தியம் செய்வார்களா என்றால் இல்லை. போட்டியை நடத்துகின்ற பந்தய