பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஒளிவளர் விளக்கு

போன்றவர்களுக்கு அருள் செய்யும் கருணையை உடைய வன்' என்பதை அவர்கள் வற்புறுத்திச் சொல்வார்கள். நமக்குப் பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கையிருந்தால்தான் மக்கள் ஒரு பொருளே அணுகுவார்கள். இறைவனுடைய கருணே நமக்குக் கிடைக்கும் என்று கூறுவதனால் கம் முடைய மனத்தை இறைவன்பாற் செலுத்த வழி வகுக் கிரு.ர்கள் பெரியவர்கள். அவர்கள் அதோடு விற்பதில்லை.

படித்து வேலையில்லாமல் அல்லலுறும் இளேஞனைப் பார்த்து முயற்சியை உடையவர் ஒருவர், 'நானும் உன்னைப் போலத்தான் இருந்தேன். வேலேக்குப் போகும்போது எனக்கு இருபது ரூபாய்தான் சம்பளம். இப்போது இரண் டாயிர ரூபாய் கிடைக்கிறது. நீயும் முயற்சி செய்' என்று தூண்டுவதுபோல அருளறுபவம் பெற்ற பெரியோர்களும் பேசுகிருர்கள். 'நான் மிக மிக இழிந்த நிலையில் இருந் தேன். இறைவன் கருணை மிகுதியால் என்ன ஆட்கொண் டான்' என்று தம்முடைய சொந்த அநுபவத்தைச் சொல் லும்போது நமக்குப் பின்னும் நம்பிக்கை இறுகுகிறது. இறைவன் அருளை நாமும் பெற முடியும் என்ற உண்மை புலப்படுகிறது. அது அழுத்தமாகப் பதிந்தவுடன் காமும் பக்தி பண்ணத் தொடங்குகிருேம்.

அந்த முறையில் கருவூர்த்தேவர் பெருவுடையார் . தமக்கு அருள் செய்த கருணையை எடுத்துச் சொல்கிரு.ர். அவன் மிகமிகப் பெரியவனுக இருந்தும் தமக்கு எளியவகை வந்து ஆண்ட கருணையைச் சொல்லி உருகுகிருர். -

தமக்கு அருள் செய்ததை மாத்திரம் சொன்னல் போதாது என்று தோன்றுகிறது. அவன் இப்படி எல்லோ ருக்குமே எளியவகிை வருபவன் போலும்' என்ற எண் ணம் நமக்குத் தோன்றும் அல்லவா? உண்மை அது அன்று.