பக்கம்:ஓங்குக உலகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. சமுதாயம்


1. ஓங்குக உலகம்

பேராரவாரம் - அஞ்சத்தக்க தோற்றம்-இவற்றுக்கிடையிலே பலவகையான குரல் ஒலிகள்-காட்டின் சூழ்நிலை இவை என் உறக்கத்தைக் கலைத்தன. கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்தேன். நல்லவேளை நான் என் வீட்டில் உட்கார்ந்திருப்ப துணர்ந்தேன். கோடையின் வெம்மை தாங்கமாட்டாது மே மாத இடையில் சென்னையில் வருந்தும் பல லட்சமக்களுள் யானும் ஒருவன் என்பதும், நான்கண்ட சூழ்நிலை, கேட்ட குரல்கள், பிற தோற்றநிலைகள் அனைத்தும் கனவிடைப் பெற்றனவே என்பதும் உணர்ந்தேன். கனவெனினும் அச் சூழ்நிலை என்னை அஞ்சவைத்தது-எனவே அதுபற்றி எண்ணினேன். கனவு நினைவிலே நிழலாடத் தொடங்கிற்று. கண்டது இதுதான்,

கொடிய காடு-வளமார்ந்த காடு. பல்வேறு வகைப் பட்ட விலங்குகளும் பறவைகளும் பெருமாநாடு நடத்தின. அவற்றுள் பலவற்றை நான் கண்டதே கிடையாது. அத்துணை அளவில் விலங்குகளும் பறவைகளும்-அவை வனவிலங்குவாரம் கொண்டாடினவோ என நினைத்தேன். எப்படியோ அவற்றினிடையில் நான் சிக்கினேன். அவை என்னை ஒன்றும் செய்யவில்லை என்றாலும், மனித

ஓ.—1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/12&oldid=1131961" இலிருந்து மீள்விக்கப்பட்டது