பக்கம்:ஓங்குக உலகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஓங்குக உலகம்


கொண்டே வரும்போது, பாம்பும் பல்லியும் சிங்கமும் புலியும் வல்லூறும் கழுகும் பிற விலங்குகளும் பறவைகளும் ஒன்றிய மனித உணர்வு பெறுகின்றன.

இதனால்தானோ மனித வாழ்வில் முன்னோடிகளாக வாழ்ந்த பல நல்லவர்கள் பாம்பையும் கருடனையும் பிறவற்றையும் தெய்வங்களாக வணங்கினார்கள் என நினைத்தேன். மண்ணுலகை மட்டுமின்றி விண்ணுலகைச் சாடி அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள நினைக்கும் மனிதன், தன்னுடன் தன் வீட்டில் உள்ளவனோடே மாறுபட்டுக் கலாம் விளைத்துக் கெடும்போது இந்த உலகம் வாழுமா! ஓங்கி உயருமா! என எண்ணி அறிஞர்கள் கவலை கொள்ளுகின்றனர். நான் கண்டது கனவாயினும் இன்றைய மனிதனின் போக்கு, இக்கனவை நனவாக்கி மனிதன் விலங்கினும் கேடாய்க் கெட்டொழிவான் என்பதைக் காட்டுகின்றதே, ஒரே உலகம்-ஒரே சமுதாயம்-ஒரே இனம் என்ற உணர்ச்சி அரும்ப வேண்டும் என்று மேடைமேல் முழங்கும் தலைவர்கள் பலரும் தனித்தனி வகுப்பறைகள் அமைத்துக் கொண்டு அதில் வாழத்தானே திட்டம் தீட்டுகின்றனர். இந்த ‘உள்ளத்தே கொடுமை வைத்து-கூட்டைவாளா ஓம்பும்’ கொடிய மனிதனைக்காட்டிலும் பாம்பும் பிறவும் பலமடங்கு உயர்ந்தன அல்லவோ! ஆம்! மனிதன் செய்யத் தவறிய ஒருமை உணர்வினை-ஒரே உலக நெறியை-விலங்குகளும், பிறவும் செய்யத் தொடங்கும் காலம் வந்தாலும் வரலாம் அல்லவா என்ற உணர்வே என் உள்ளத்தில் பிறந்தது. அந்த நாள் வருமுன் மனிதன் திருந்தினால் உய்தி உண்டு. இன்றேல்......

1965 ‘உலகம்’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/15&oldid=1126367" இலிருந்து மீள்விக்கப்பட்டது