பக்கம்:ஓங்குக உலகம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

ஓங்குக உலகம்


வாழ்வு ஆண்டவனை வழிவழியாகப் பற்றிய ஒன்று. எனவே இந்தப் பிறவியிலும் அவ்வாழ்வு ‘பிறந்து மொழி பயின்று பின்னெல்லாங் காதல் சிறந்து’ நிற்கும் வகையில் அமைந்தது. எனினும் அவ்வாழ்வு ‘பரமதத்தனோடு’ கொண்ட மணத்தின் காரணத்தால் குறையுற்றது. உள உறவை அறியா நிலையிலே இருவர்தம் மணவாழ்வில் விரிசல் காண முடியவில்லை என்றாலும் ஒருமை உணர்வு பெறவில்லை என அறிய முடிகின்றது. முடிவில் நிலைத்த காதல் வெற்றிபெற்று நிற்க ‘அம்மை’ அப்பனை ஆலங்காட்டில் அடைவதைக் காண்கின்றோம். உலகியலாகிய இல்லற நெறிப்படி எண்ணும்போது இந்த அம்மையின் நெறி மாறுபட்டதாகக் காணினும் உயர்ந்த தெய்வநெறிக் காதல் வழியில் இது சிறக்க அமைகின்றது. அவ்வம்மையைத் தெய்வமாக உலகம் மதிக்கிறது-போற்றுகிறது-புகழ்கின்றது. பதினோறாந் திருமுறையில் இறைவன் பாடலுக்கு அடுத்த நிலையை இவர் பாடல் பெறுகின்றது.

முற்றும் துறந்த மணிமேகலையின் உள்ளம்கூட முந்தைப் பிறவியின் கணவனைக் காணத் தடுமாறுகின்றது. எனினும் அவர்தம் சமயநெறி சார்ந்த தெய்வக்காதல் அதை மறக்கச் செய்து மணிமேகலையைத் தெய்வ நெறிக்கு உயர்த்திச் செல்லுகின்றது. மணிமேகலையின் உள்ளம் சென்ற பிறவியில் கணவனாகக் கொண்டவனிடம் காட்டிய காதலினும் வழிவழிப் பற்றிய தெய்வ நெறியிடம் காட்டிய காதலால் சிறந்து நின்றமையின் அதனுடன் அவர் ஒன்றி உயர்ந்து போற்றப் பெற்றார்.

தெய்வத்திடம் மட்டுமன்றி மக்களுக்குள்ளேயே இந்த உணர்வு அரும்புவதையும் ஒருசில நிகழ்ச்சிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/177&oldid=1128016" இலிருந்து மீள்விக்கப்பட்டது