உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓர் இரவு

99


வா : (பரிதாபத்துடன்) இல்லையே.

[மாடியிலிருந்து எழுந்து கொஞ்சம் கோபமாக]

வே : என்னய்யா இது? விளையாட்டா? எடுங்க. அண்ணனுக்குக் கொடுக்கணும். நமக்கும் ஏதாச்சும் வாங்கணும். பாலைக் காச்சி வைச்சேன், பூனை உருட்டி விட்டுது. பால் வாங்கணும்.

வா : (மடியிலிருந்து ஒரு செயின் எடுத்துக்காட்டி) இதோ பார்! இதுதான் இருக்கு.

[வேதம் அதைக் கையில் வாங்கிப் பார்த்து
ஆச்சரியத்துடன்

வே : செயினா! ஏது இது?

வா : (போலி தைரியத்துடன்) ஏன் என்னுடையதுதான்!

வே : (கொஞ்சம் அலட்சியமாக) உன்னுடையதா? ஏன், இதை எடுத்துக்கொண்டு வந்தே பணம் இல்லையா?

வா : (அசடு வழிய) இல்லை! பணத்துக்குப் பதில் இதை வைத்துக்கொள். பத்து நாளைக்கு நான் இங்கேயே தங்கி இருக்கப் போகிறேன். இது 5 சவரன். செலவுக்கு இது போதாதா?

வே : (மிரட்டும் குரலில்) நிஜத்தைச் சொல்லு, இதை எங்கிருந்து திருடினே?

வா : (பயமும் வெட்கமும் அடைந்து) திருடுவதா? என் நகையை நான் ஏன் திருடப்போகிறேன்!

வே : (மிரட்டி) நிஜத்தைச் சொல்லு.

வா : சத்தியமா, இது எங்க வீட்டுதுதான்.

வே : உங்க அம்மாவுதா?

வா : இல்லை.

வே : உன் சம்சாரத்துதா?

வா : ஆமாம், இருந்தா என்ன?

வே : இரு, இதோ வர்ரேன். வெத்திலைப் போட்டுக்கோ.

[வேதம் வாசற்படி சென்று ஆறுமுகத்தைக் கண்டு]

வே : பார்த்தாயா இந்த வேடிக்கையை. அந்தப் பயல் இதை வீட்டிலே இருந்து அடித்துக்கொண்டு வந்திருக்கான்.

ஆ : அட, செயின்! வேறே எங்கேயாவது களவாடி இருப்பானோ?

வே : இல்லை, சுத்த அசட்டுப் பயலா இருக்கறான். முழிமுழின்னு முழிக்கிறான். ஆமா, இப்ப என்ன செய்யறது? பாவம். அவன் சம்சாரத்துதாம் செயின். அவ சபிச்சுக் கொட்டுவா.

ஆ : சரிதான் போடி. சாபம் வந்து உன்னைச் சர்ப்பமாகக்