உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அறிஞர் அண்ணா


போகத்திலேயே இருந்தவரு. ஒருநாள், ஊரைச் சுத்திப் பார்த்தாராம், நோய் பிடிச்சவன், ஏழை, நொண்டி, குருடன், பிணம் இப்படிக் கண்றாவிக் காட்சியாகப் பார்த்தாரு. உடனே அவரு மனமே குழம்பிப்போச்சி. செ! என்னா உலகம்பா இது! இதிலே இவ்வளவு ஆபத்தும் ஆபாசமும் இருக்கான்னு ஆயாசப்பட்டாராம்.

ஒரு இரவிலே எங்க உலகிலே நடக்கற கோரத்தைக் கண்டா, உங்களாட்டம் இருக்கறவங்களெல்லாம், புத்தர் மனசு பாடுபட்டுதுன்னு டிராமா காட்டினாங்களே அதுபோலே, ஆய்விடுவிங்க.. அவ்வளவு கோரம், கொடுமை, ஆபாசம் தாண்டவமாடும்.

சே : ஆமாம் ரத்னம்! பார்த்தாலே....

ர : வாந்திவரும்! ஆனா, எல்லாம் எதனாலே வருதுன்னு நினைக்கிறிங்க. ஏழ்மை. படிப்பில்லாமெ இருக்கிறது; நல்லவங்க நமக்கென்னானு போயிடுவது; இதுதான் காரணம். இரண்டு உலகம் இருக்கு டாக்டர், இரண்டு இருக்கு: ஒண்ணை ஒண்ணு கேலிசெய்துகிட்டு, விரோதிச்சிக்கிட்டு. காமம், குடி, களவு, கொலை, கலகம் யாவும் இரண்டு உலகிலேயும் உண்டு. உங்க உலகத்துச் சமாசாரம், வெளியே சுலபத்திலே வராது. எங்க விஷயம் ஊர் பூராவும் பரவிவிடும்.

நாங்க மொந்தையிலே இருக்கற கள்ளுமாதிரி, பொங்கி வழியறது. உங்க உலகத்துக் கெட்ட நடவடிக்கை, கார்க் போட்ட சீசாவிலே ஊத்தி அனுப்பற ஒசத்தி சரக்கு மாதிரி.

[இருவரும் போகின்றனர்.]

காட்சி -45

இடம் :- இடிந்த சுவரோரம்.
இருப்போர் :- ஒரு நோய்பிடித்த பெண்.

(பிறகு) ஜெகவீரன்,
(பிறகு) டாக்டர், ரத்னம்.

[சுவரோரத்தில், விளக்குக் கம்பத்தருகே, முக்காடிட்டுக் கொண்டு, ஓர் உருவம் படுத்துக்கிடக்கிறது. ஜெகவீரன், குடிவெறியிலே, அங்கு வருகிறான். உருவத்தைக் கண்டு, தடியாலே போர்வையைத் தள்ளிப் பார்க்கிறான். அவள் எழுந்து, வெறியாக இருக்கும் ஜெகவீரனைப் பார்த்து.]

அவள் : யாருய்யா நீ? அன்யாயம் செய்யறே. படுத்துக்கிட்டு இருக்கறவளே தட்டி எழுப்பறே.