உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இரவு

55


உம்மைப் பெறவில்லை. உமது மனம் மாறவில்லை. கோயிலுக்கு வந்த வேறு பலரின் மனதிலே ஆசையைக் கிளறவே பயன்பட்டது.

உலகமென்ன தர்ம சத்திரமா என்னைக் காப்பாற்ற. நான் வாழ வழியில்லை. என் குடும்பம் தத்தளித்தது, காப்பாற்ற மார்க்கம் இல்லை.... நான் விபசாரியானேன் விபசாரியாக்கப்பட்டேன்.

தே : ஐயோ! பாவி நான்.....

சொ : பதற வேண்டாம்! குல மாதாக. குடும்ப விளக்காக. தங்கள் தர்ம பத்தினியாக இருக்க வேண்டுமென்று தவம்கிடந்தேன். இன்று! உமது கண்களை மயக்கும் காமவல்லியாக நிற்கிறேன். மிட்டாதாரரின் போகப் பொருள்.

காதலிக்கத் தெரிந்த உமக்குக் கடமையின் இலட்சணமும் தெரிந்தால் நான் இந்தக் கதிக்கு ஆளாகி இருக்கமாட்டேன். உம் நெஞ்சிலே வஞ்சகம் இருந்தது. கொஞ்சினீர். பிறகு, விதவை நமது அந்தஸ்தை, குலப்பெருமையைக் கொல்லும் நஞ்சு என்று எண்ணிக் கைவிட்டீர்.

தே : சமூகம் என்னை வற்புறுத்திற்று. மிரட்டிற்று.

சொ : சமூகம், சாலை ஓரத்தில் உலாவும் அபலைகளை நம்பிக்கை கொள்ளும்படி செய்து, பிறகு நட்டாற்றில் விடும்படியும் சொல்கிறதா? சமூகத்தின் கோபத்துக்குப் பயந்தீர்: உமது மனம், உமக்கு ஒன்றும் கட்டளை பிறப்பிக்கவில்லையா? அவள் அபவை! உன்னை நம்பினாள்! உலகமே நீதான் என்று எண்ணினாள். அவளுக்கு நீ ஆயிரம் தடவை சத்தியம் செய்திருப்பாய்; அவளுடைய நெஞ்சு நடுங்கிய போது, நீ அவளை பயப்படாதே என்று கூறினாய். அவள் அதற்கு முன் கேட்டறியாததெல்லாம் பேசினாய்: கண்ணீரைத் துடைத்தாய். கூந்தலைக் கோதினாய், கோமளமே என்று கொஞ்சினாய். அவளைக் கைவிடாதே. நீ கைவிட்டால், அவள் சமூகத்தின் சாபம் என்று அழைக்கப்படும், விபசாரப் படுகுழியில் தள்ளப்படுவாள்!" என்று உம்முடைய மனம் சொல்லவில்லையா? மாளிகை வாசம் இருந்தால் என்ன, மனம் அங்கே மட்டும் இரும்பா?