உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

அறிஞர் அண்ணா


மாட்டிக்கிட்டயே, ஏங்கிட்ட; விடுவேனா சும்மா! அதுவும் ஏழை, நானும் ஏழை ஜாதி, எப்படி அதை நடு ரோடிலே தேம்பத் தேம்ப விட்டு விட்டுப் போகமுடியும்?

[தேவரைப் பிடித்திழுக்க அவர் போகாமல் நின்று திமிருகிறார். சொர்ணம் தோட்டக்காரன் கையைத் தொட்டு]

சொ : வேண்டாம், விட்டுவிடப்பா! போகட்டும்.

தோ : திருடன் பிடிபட்டா, யாரு வீட்டிலே களவாடினானோ அவனே வந்து விட்டுவிடச் சொன்னாக்கூட போலீசார் விடமாட்டாங்க திருடனை. இந்த மாதிரி ஆசாமிகளைக் கண்டா நான் விடற வழக்கமே கிடையாதும்மா. நீ சும்மா இரு, வருவாரு.

[தேவரைப் பார்த்து]

வாங்கய்யா! வாங்க! சும்மா வாங்க!

[இழுக்க இழுக்கத் தேவர் திமிரிக்கொண்டு இருக்கவே கோபம்கொண்டு]

அடே! வாடா, மகா பெரிய யோக்யன்! நாலு நாழியாக் கூப்படறேன்,என்னமோ ராங்கி காட்டறே நம்பகிட்ட

[தேவரைப் பற பறவென்று இழுத்துச் செல்லுகிறான்]

காட்சி - 22

இடம் :- தோட்டக்காரன் வீடு.
இருப்போர்:- தோட்டக்காரன், தேவர், சொர்ணம்.

[மூவரும் வீட்டுக்குள் வந்தபிறகு. ஒரு கை ஒடிந்த நாற்காலியைத் தூக்கிப் போட்டு, தேவரை உட்காரும்படி ஜாடை காட்டிவிட்டு, ஒரு பழைய பாயை விரித்து. சொர்ணத்தை உட்காரச் சொல்லிவிட்டு, தோட்டக்காரன் ஒரு செம்பிலே தண்ணீர் கொண்டுவந்து]

தோ : (சொர்ணத்தைப் பார்த்து) ஏம்மா! தண்ணி வேணுமா?.

(தேவரைப் பார்த்து) ஐயாவுக்குப் பாலுகீலு வேணும். ஏழை வீடு. இங்கே ஏது?