ஓர் இரவு
71
என்று பாடுவா. அப்போ. மோகம்னு சொல்லுகிறபோது, மோகமேதான். அம்மா என்கிறபோது,அம்மா எதிரே வந்து நிற்பது போலத்தான் இருக்கும்.
[நண்பன் அபிநயத்துடன் பாடிக் காட்டுகிறான்]
அதை நான் சொன்னால் புரியாது. நீங்க பார்க்கவேணும், பிறகு......
சீ : அப்படியா?
ந : பாட்டுக்கு இடையிடையே ஒரு மோகமான புன்சிரிப்பு...
சீ : புன்சிரிப்பா!
ந : ஆளை அந்தப் புன்சிரிப்பு என்ன செய்துவிடுது என்கிறீங்க. அவ, கல்யாணியில் ஆரம்பித்துக் காம்போதியில் போய்த்தான் முடிக்கட்டுமே, பெரிய வித்வான்கூட, அதைக் குற்றம்னு சொல்லமாட்டான். அவளேகூட, இராகம் தவறிவிட்டதுன்னு சொல்லட்டும், அந்த மகா வித்வான், அடடா! இராகமாவது தவறுவதாவது! நீங்க பாடினது அபூர்வமான முறை அல்லவா! மற்றதுகள். ஏற்கெனவே பாடாந்திரமான இராகங்களைப் பாடுகிறதுகள். ஒரு புது இராகமே அல்லவா நீங்க உற்பத்தி செய்துவிட்டீர்கள் - என்று புகழ்வான்; எல்லாம் அந்த மோகனப் புன்னகைக்குத் தான்.
சீ : அதனாலேதான் அந்தப் பயல், அவளுக்கு ஆயிரம் ஆயிரமாகக் கொட்டித் தருகிறான்.
ந : தந்து என்ன கண்டான்? குட்டி இங்கே வரப்போகிறாள். பிறகு.... ஒரு தடவை தங்களைக் கண்டா போதாதோ? பிறகு அவளை அவன் ஆயிரம் நமஸ்காரம் செய்து அழைத்தாலும் போவாளோ?
[வேலையாள் அடக்கமாக நின்றுகொண்டு]
வே : கோனாரு வந்திருக்காரு.
சீ : யாரு? கோவிந்தனா?
வே : ஆமாங்க.
சீ : அதைத்தான் கோநாரு. வந்தாரு.ன்னு ரு'போடறயா'ரூ'. போய் வரச்சொல்லு.