86
அறிஞர் அண்ணா
சு : (கட்டிலைவிட்டு எழுந்து நின்றுகொண்டு) ரத்னம்! வா, வா! அதோ வருகிறான்: சொன்னது ஞாபகமிருக்கட்டும் - ஆரம்பி....
ர : (கூச்சமடைந்து) சங்கடமாக இருக்கிறதம்மா.
சு : ஐய்யோ! கடைசியில் காரியத்தைக் கெடுத்துவிடுவாய் போலிருக்கிறதே.
[அவன் கையைப் பிடித்து இழுத்துத் தன் தோள்மீது வைத்து, அணைத்துக் கொண்டிருப்பது போல பாவனை செய்கிறாள்.
காலடிச் சத்தம் மேலும் பலமாகிறது. ஏதாவது பேசும்படி ரத்னத்துக்கு ஜாடை காட்டுகிறாள்.]
ர : சுசீலா! கண்மணி!
[காலடிச் சத்தம் நிற்கிறது]
சு : (கொஞ்சும் குரலில்) நாதா! நாம் இருவரும்.......
[காலடிச் சத்தம் மீண்டும்]
சு : அந்தக் காமுகன் ஜெமீன்தாரன் நமது காதலைத் தடுக்க முடியுமா? அவனுக்கு நான் யாரைக் காதலிக்கிறேன் என்பதே தெரியாது. நான் யாரோ ஒரு டாக்டரைக் காதலிப்பதாக நம்புகிறான்.
ஒவ்வோர் இரவும் என் நாதன் இங்கே வந்துபோவது தெரியாது.
[சுசீலா தன் கைகளுக்கு முத்தமிட்டுக் கொள்கிறாள். அறைக் கதவு தடால் என்று உதைக்கப்பட்டு, சேகர் பாய்ந்துவருகிறான் உள்ளே. காட்சியைக் காண்கிறான், தலை சுழலுகிறது.]
சே : மோசக்காரி! வஞ்சகி!
சு : [தன்னெதிரே சேகர் வந்திருப்பது கண்டு மிரண்டு! ஐயோ தாங்களா.....
[ரத்னம், சுசீலாவைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொள்கிறான். முரட்டுத்தனமாக, அவளை இழுத்துக் கொள்கிறான்.]
ர : பயப்படாதே சுசீலா! பார்த்துவிட்டால் என்ன? தலையா போய்விடும்?
க : (குளறியபடி) ரத்னம் இதைக் கேள்!
[ரத்னம் தன் பிடியைத் தளர்த்தவில்லை விலகிக்கொள்ள சுசீலாவால் முடியவில்லை.]