உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அறிஞர் அண்ணா


சு : என்ன அநியாயம்! சேகர்! நான் சொல்வதை...

[சேகர், சுசீலாவைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, ஜன்னல் பக்கம் பார்க்க. ரத்னம் தோட்டத்திலே ஓடக்கண்டு ஜன்னல் வழியாகவே கீழே இறங்குகிறான். ரத்னத்தைப் பிடிக்க]

காட்சி - 36

இடம் : ரத்னம் வீடு.
இருப்போர் :- ரத்னம், அவன் தாய் சொர்ணம்:

[சொர்ணம் நோயால் வாடி வதைகிறாள், படுக்கையில் புரண்டபடி. உதவிக்கு யாரும் இல்லை. ஏழ்மையின் கோலம் நன்றாகத் தெரிகிறது. தாகமேலிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயல்கிறாள். முடியவில்லை. தள்ளாடி எழுந்திருக்கிறாள். நிற்க முடியவில்லை, கீழே விழுகிறாள். வேதனை அடைகிறாள். மெல்ல நகர்ந்து சென்று, ஒரு சட்டியை எடுத்து, அதிலே இருந்த வெந்நீரைக் குடிக்கிறாள். கை உதறுகிறது. சட்டி கீழே விழுந்து உடைகிறது. மெள்ள நகர்ந்து படுக்கையில் வந்து, கயிற்றுக் கட்டிலைப் பிடித்துக்கொண்டு, எழுந்திருக்க முயல்கிறாள். படுக்கை மேலே வீழ்கிறது; சொர்ணம் கீழேயும், கட்டில் மேலேயுமாக இருக்கிறது. ஈனக்குரலில் கூவுகிறாள். ரத்னம் உள்ளே வருகிறான்.]

ர : அடடா! அம்மா விழுந்துவிட்டாயா?

[கட்டிலைத் தூக்கி நிமிர்த்துகிறான். தாயைத் தூக்கி மெள்ளப்படுக்க வைத்துவிட்டு]

கண்றாவி! ஏம்மா எழுந்தே நீ? உன்னாலே முடியுமா இந்த நிலையிலே!

சொ : அடே! ரத்னம்! எங்கேடாப்பா போனே? இந்தக் கடைசி காலத்திலே, என்னோடு இரு. இப்ப நான் விழுந்து எழுந்து ஒரு முழுங்கு தண்ணி குடிக்கலையானா. உயிர் இழுத்துக்கிட்டே போயிருக்கும்.

ர : என்னாம்மா செய்வது? உனக்காகத்தான் வெளியே போனேன், பணம் தேட.

சொ : பணமா? ஏண்டாப்பா பணம்?

ர : டாக்டருக்கு.

சொ : பைத்யண்டா உனக்கு இன்னைக்கோ நாளைக்-