90
அறிஞர் அண்ணா
சொ : பாவம்! இப்படி இஷ்டப்படாதவனைத் தலைமேலே கட்டுவதாலே. வேண பெண்ணுக மாண்டு போறாங்க.
ர : இந்தப் பெண்ணு புத்திசாலி, தப்பித்துக் கொண்டா.
சொ : ஏண்டா ரத்னம்! விஷம் சாப்பிடாதேன்னு நீ புத்தி சொன்னாயா?
ர : வேடிக்கையா இருக்கும்மா, நீ கேக்கற கேள்வி. நான் போனது திருட! உபதேசம் செய்யவா போனேன்? நான் என்ன குருவா? அவளே ஒரு யோசனை சென்னா!
சொ : உன்னைக் கண்டு அவ பயப்படவில்லையா?
ர : சாவுக்கே பயப்படலேன்னா! நிஜத்தைச் சொல்லணுமானா, எனக்கு இலேசா பயமா இருந்தது, அவளைப் பார்த்து. அவள் தன் நிலைமையைச் சொல்லி, ஒரு உதவி செய்யச் சொன்னா.
சொ : உன்னையா?
ர : ஆமாம்மா! என்னைத்தான்!
சொ : நீ என்னா உதவி செய்யறதாம்?
ர : கேளு, அந்தக் கூத்தையும். கொஞ்ச நேரம் காதல் நாடகம் ஆடச்சொன்னா அந்தப் பெண்ணு.
சொ : என்னாது? காதல் நாடகமா?
ர : (சிரித்துக்கொண்டு) ஆமாம்மா! அவளை நான் காதலிப்பதுபோல நடிக்கச் சொன்னா.
சொ : இது என்னடா பைத்யக்கார வேலை.
ர : பைத்தியமில்லை. அவ மாமன் அங்கே வருவான், அதைப் பார்ப்பான், உடனே. சே! இவ இப்படிப்பட்ட நடத்தைக்காரியான்னு நினைச்சுக் காரி முழிஞ்சுட்டுப் போவான். கலியாணத்துலே இருந்து தப்பித்துக் கொள்ளலாம்னு, அந்தத் தந்திரம். அதுக்காகத்தான் என்னைக் கொஞ்சநேரம் காதலனாக இருக்கச் சொன்னா.
சொ : பலே சாமர்த்தியக்காரிதான்.
ஏ : களவாடப்போன இடத்திலே இந்த உத்தியோகம் கிடைச்சுதா, சரின்னு ஒத்துக்கொண்டேன். அவ சொன்னபடியே. அந்தப் பய வந்தான்.
சொ : யாரு?
ர : அவ மாமன், யாரோ ஜெமீன்தாரன்.
சொ : வந்து?
ர : வந்து, ஆசாமி அப்படியே ஆவேசம் வந்தவன் மாதிரி