பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ஓ ! ஓ ! தமிழர்களே !

டால், அதனுடைய செயல்பாடுகளுக்கு உன்னை உள்ளாக்கிக் கொண்டால், நீ எந்தச் சூழலிலும், எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும், உன்னுடைய கையை நெகிழ்த்துக் கொள்ளாது இருப்பதுதான் இன்றைய உலகத்திலே நிலைபெற்றது. பெருமைபடக்கூடியது - என்று அவர்கள் சொல்வார்கள். இதை எங்கே சொல்கிறார்: குடிசெயல் வகையிலே முதல் குறளாகச் சொல்கிறார்

"கருமம் செயஒருவன் கைதூவேன்' என்னும்
பெருமையின் பீடுடுடைய தில்" (1021)

எனக் கூறுகிறார். எனவே எந்த நிலையிலும் குடி தாழ்ந்து கிடந்தது: குடி என்றால் குடும்பம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். தமிழ்க் குடியைச் சொல்லியுள்ளார். இந்தத் தமிழ்க் குடியை அனைத்து நிலைகளிலும் நிலை நிறுத்த வேண்டும். அறிவு, தமிழ், திருக்குறள் என்று தனித்தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்

திருக்குறள் என்பது தமிழின மீட்பு நூல் :

திருக்குறள் தொடர்பாகப் போராடுகிற அனைத்து அறிஞர்களுக்கும் நான் சொல்லிக் கொள்ளுகிறேன். திருக்குறள் என்பது இன மீட்பு நூல் என்பதை மறந்துவிட வேண்டாம். அதிலே வாழ்க்கை, சொல்லப்பட்டிருக்கிறது. எந்த வாழ்க்கை, "தமிழியல் வாழ்க்கை" : அதிலே அறம் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த அறம்: "தமிழியல் அறம்" அதிலே பண்பு சொல்லப்பட்டிருக்கிறது எந்தப் பண்பு? "தமிழியல் பண்பு"

இந்தத் தமிழினம் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே தோன்றி