பக்கம்:ஔவையார் கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தமிழ் ஓங்குக.
ஒளவையார் கதை
கடவுள் வணக்கம்
பாட்டு

செந்தமிழ்ச் சொக்கநாதா! செய்யகயற் கண்ணித்தாயே! தொந்தி விநாயகனே! கந்தவேள் என்னும்மைந்தா! இந்தநல் வேளையிலே எங்களுக்கு அருளவேண்டும் வந்தடி வணங்கி நின்றோம் வாக்கருள் பண்ணவேண்டும் தென்கடல் குமரியம்மா திருவருள் செய்யவேண்டும்! பொன்னடி போற்றிகின்றோம் இன்னருளைப் பண்ணவேண்டும் கன்னல்தேன் அன்னமொழி கன்னித்தமிழ் அமுதமொழி மன்னவர் காத்தமொழி மாநிலமே ஏத்தும்மொழி அரியசெந் தமிழினிலே அழகுறப் பாடவேண்டும். பெரியோர்கள் நீங்களெல்லாம் பேணியே கேட்கவேண்டும் உரியபேர் ஒளவையென்னும் உயர்செல்வி கல்விவல்லாள் பிரியமாய் இளைஞரெல்லாம் பேசுமொரு பெண்புலவர் நாமகளின் அவதாரம் கங்கையர்க்குள் அவள்சாரம் பாமகள் ஒளவையாவார் பாருக்குப காரமாவார் பூமியாள் அரசரெல்லாம் போற்றியே வணங்கப்பெற்றார் நாமமிது தெரியார்கள் நாட்டிலேதும் அறியார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/5&oldid=507839" இலிருந்து மீள்விக்கப்பட்டது