பக்கம்:கங்கா.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

119


"என்ன குருட்டு யோசனை பண்ணிக் கொண்டிருக் கிறேன்? எனக்கு ஏன் இது நேர்ந்தது ? எனக்கு-எனக்கு எனக்கா ?” அவன் அகந்தைகள் என்னென்னவோ அவையனைத் தும் அவன்முன் அலங்கோலமாய்ச் சென்றன. தன்னைப் பற்றி அவன் என்னென்ன எண்ணிக் கொண்டிருந்தானோ எல்லாம் அவனைக் கேலி செய்தன. "ஏ, மனிதா நீ விழுந்த நிலையென்ன பார்த்தாயா?" காலடியிலிருந்த செருப்பைத் தூக்கி சுவரின்மேல் ஆத்திரத்துடன் வீசியெறிந்தான். ஆனால் அது அவன் மேல்தான் சுவரிலிருந்து குதித்துத் திரும்பிற்று. கண்களில் சிவப்பு நரம்புகள் துடித்தன. இப்போ தெல்லாம் சற்றுநேரம் சேர்ந்தாப்போல் விழித்துக்கொண் டிருந்தாலே விழிகளில் கண்ணிர் நிறைந்தது. “எனக்கு ஏன் இது நேர்ந்தது ?" ஐந்து வருடங்களாய் அலுக்காத, சலிக்காத கேள்வி: சில சமயங்கள் சமாதானத்தைத் தானே இட்டுக் கட்டிப் பார்த்துக் கொள்வான். சீ என்னைவிட எத்தனைபேர் கேவலமாயில்லை : எத்தனை பேர் கால்போய் கைபோய் நளாயினியின் கணவன்போல் கூடையில் தூக்கிக்கொண்டு போகும் கேஸ் களாக இல்லை ? அவர்களைவிடவா நான் மோசம் ? குருட்டு யோசனைகளிடையே அவனுடைய முந்தைய நாட்களின் நினைவு வரும்: இளம் வயதிலே பெற்றோரை யிழந்து உற்றார் உறவினர் ஆதரவின்றி, நடுத்தெருவில் நின்று. நாலுபேர். வீட்டில் வாரச் சாப்பாடு சாப்பிட்டுத் தருமசம்பளம் பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/133&oldid=1283336" இலிருந்து மீள்விக்கப்பட்டது