பக்கம்:கங்கா.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

கங்கா


கள் வெட்கமற்றுச் சில்லிட்டன. இன்னும் அந்த ஈரம் மனதில் நிற்கிறது. முன்னுமில்லை, பின்னுமில்லை; அந்த நிமிஷத்தின் தெறிப்பில்தான் அம்மா தன்னுள் இத்தனை நாள் எனக்குக் கூடத் தெரியாமல் அடக்கி வைத்திருந்த ஆசை தெரிந்தது. வேளைப் பொருத்தமில்லாமல் சாந்தி முகூர்த்தம் இரண்டு மாதங்கள் தள்ளிப்போயிற்று. ஆனால் அம்மா வின் ஆசை, மருமகளை நிறுத்திக் கொண்டாள். கூச்சமும் களங்கமுமற்ற கமலியின் பேச்சின் வெகு ளிக்கு எல்லையே இல்லையோ என நான் வியப்புற்ற துண்டு.லஜ்ஜையும் பட்டதுண்டு. நாலு சகோதரர் நடுவில் ஒரே பெண், செல்லப் பெண்ணாய் வளர்ந்த பயன். முதலில் அவள்தான் பேசினாள். சே, இத்தனை வயதாகியும் இந்த விஷயத்தில் ஏன் பச்சைக் குழந்தையா யிருக்கிறோம் ? யார் முதலில் பேசினால் எல்ன? ஆனால் இதை ஒரு முக்கியமான தலை போகும் விஷயமாய், விலை மீறிய நகையாய் ஏன், மனப் பேழையில் தனியறை யில் முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்கிறோம் ? . "எங்கிருந்தோ வந்தீர்கள்; என் கையைப் பிடித் தீர்கள், உங்களுக்கென்று ஆக்கிக்கொண்டு விட்டீர்கள்" நான் கூச்சமுற்றேன். - - "சினிமா சினிமா-* அவள் கண்கள் நிறைந்தன. "உண்மையாய், சத்திய, மாய், விட்டேன் என்று சொல்லுங்கள்-” கையை விடுவித்துக் கொள்ள முயன்றேன். "உஷ். அம்மா வந்துவிடப் போகிறாள் !” . "விட்டேன் என்று சொல்லுங்கோளேன் ." "விட்டேன்" என்ற பின்தான் விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/202&oldid=1283377" இலிருந்து மீள்விக்கப்பட்டது