பக்கம்:கங்கா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறைபட்ட இலை ஒரு காலத்தில் ஒர் இலை, அணில் கிள்ளிவிழுந்தது; ஆலிலை. விழுந்து, கீழே வளர்ந்திருந்த முட்புதரில் சிக்குண்டது. வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, பனியில் விறைத்து, காற்றில் குளிர்ந்தது. கொஞ்ச காலம். ஆலமரத்தடியில் ஒரு வாய்க்கால். எங்கேயோ, எப் போதோ பிறந்து, பாம்பைப்போல் நெளிந்து எங்கெங்கோ சென்று கடைசியில் எங்கேயோ மறைந்தது. ஒரு நாள் ஒருத்தி அங்கே வந்தாள். பறைச்சி. (அந்த நாள் அப்படிச் சொல்லும் நாள்தான்) தலையில் ஒரு சோற்று மூட்டை. வயலில் கவலையடிக்கும் தன் புருஷ லுக்குக் கஞ்சி கொண்டு போகிறாள். வாய்க்காலில் தண்ணிர் குளு குளுவென்று ஓடிற்று. வெய்யில் வெந்தது, அவள் உடல் வியர்த்தது. புடவையை அவிழ்த்து, கரையோரமாய்ச் சோற்று மூட்டையுடன் வைத்துவிட்டு, ஜலத்தில் இறங்கினாள். அவள் குளிக்கையில் எதிர்க்கரையில் ஒருவன் வந்தான். இளவல். அவனுடைய எண்ணெய் வறண்ட செம்பட்டை மயிரில் வெயில் விழுகையில் தங்கமோதிரக் குவியலாய் தலை மாறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/40&oldid=764418" இலிருந்து மீள்விக்கப்பட்டது