பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சங்கேத சம்பாவுனே 8垣

இத்தகைய சந்தர்ப்பத்தில் அந்தப் பெண்மணியின் கணவனும் சகோதரனும் சந்தேகத்துக்குக் காரணமான நண்பனும் ஒரு சத்திரத்தில் சக்திக்க நேர்ந்தது. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் குரோதம் பாராட்டாமல் பழகுகிற வர்கள். ஆகையால் பெண்மணியின் சகோதரன், "மூவரும் ஏதேனும் விளையாடலாம்” என்று சொல்லிப் பகடை உருட்டி விளேயாட ஏற்பாடு செய்கிருன். - .

விளேயாட்டு ஆரம்பமாகிறது. சகோதரனுக்கு விளை யாட்டின்மேல் நோக்கம் இல்லை. தன் தங்கை புருஷனது சந்தேகத்தைப் போக்கிச் சமாதானம் செய்ய அவன் வழி தேடிக் கொண்டிருக்கிருன். .

பகடை உருட்டும் பொழுது எதையேனும் பாடுவது வழக்கம். சகோதரன் அந்தப் பாட்டின் மூலமாகத் தன் தங்கை நிலையைக் குறிப்பிக்கலாம் என்று எண்ணுகிருன் இளங்குமரியாகிய தன் தங்கை ஏழு நாட்களாக அன்ன ஆகாரம் இன்றி வாடுகிருள் என்பதைச் சங்கேதமாகத் தெரிவித்து விடுகிருன்.

சகோதரன்

ஏதேது வாழை .

இளவாழை செவ்வாழை, ஏழுநாள் ஆச்சு,

தண்ணீர் குடித்து உருட்டேடா பகடை 1. இதை அப்பெண்மணியின் கணவனும், சந்தேகம் உண்டாகக் காரணமாக இருந்த நண்பனும் கவனிக்கிருர் கள். அந்தக் குறிப்புப் பாட்டு அவர்கள் உள்ளத்திலே புகுந்து கிளர்ச்சியை உண்டாக்கி விட்டது. .

நண்பன் ஒருவாறு விஷயத்தை உணர்ந்திருக்கிருன். தன் அன்பனைப் பார்க்கச் சென்றபோது அவன் மனைவி.