பக்கம்:கடற்கரையினிலே.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. திருநாவுக்கரசர்


மிழ் நாட்டில் ஈசனுக்குரிய கோயில் ஈச்சுரம் என்று வழங்கப் பெறும் முன்னாளில் மன்னரும் முனிவரும் பல ஈச்சுரங்கள் எடுத்தனர். பல்லவ மன்னன் ஒருவன் எடுத்து திருக்கோயில் பல்லவனீச்சுரம் எனவும், அகத்தியமுனிவன் எடுத்த ஆலயம் அகத்திச்சுரம் எனவும் வழங்குதலால் இவ்வுண்மை விளங்கும். இத்தகைய ஈச்கரங்களை யெல்லாம் முறையாக வணங்க ஆசைப்பட்டார் திருநாவுக்கரசர். அவ்வாசையால் தமிழகத்திலுள்ள ஈச்சுரங்களைத் தொகுத்து ஒரு திருப்பாசுரம் பாடினார்: அப்பாட்டில் அமைந்த திருக்கோயில்களை ஒன்றன் பின் ஒன்றாக வணங்கிப் பாண்டி நாட்டிலுள்ள இராமேச்சுரத்தை வந்தடைந்தார்; கோடிக்கரையில் நீராடி


1. " நாடக மாடிடம் நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம்,

நாகேச்சுரம், நாககேளிச்சுரம், நன்கான
கோடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டிச்சுரம்,
குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், கூறுங்கால்
ஆடகேச்சுரம், அகத்திச்சுரம், அயனிச்சுரம்,
அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்கரம் என்றென்று ஏத்தி
இறைவன் உறைகரம் பலவும் இயம்பு வோமே"

- அடைவு திருத்தாண்டகம்,