பக்கம்:கடற்கரையினிலே.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 
முகவுரை

ற்பனைக் கட்டுரைகள் இருபதுடையது இந்நூல். கண்ணுக்கினிய காட்சி தரும் கடற்கரையிலே நின்று, கவிஞரும் கலைஞரும் பேசும் பான்மையில் அமைந்த இக்கட்டுரைகளிலே தமிழகத்தின் செழுமையும் செம்மையும், பழமையும் பண்பாடும் சிறந்து விளங்கக் காணலாம். விருதைத் 'தமிழ்த் தென்ற' லின் வழியாக வந்த இருபது கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்க இசைவு தந்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும், இந்நூலை வெளியிட்டு உதவிய ‘பழனியப்பா சகோதரர்’கட்கும் எனது நன்றி உரியதாகும்.

சென்னை.
15-2-1950
ரா. பி. சேதுப்பிள்ளை