பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தக் கதைகள்


         ரஷ்ய இலக்கியத்தில் - உலக இலக்கியத்திலும் கூடத் தான் - மகத்தான தொரு ஸ்தானம் பெற்றுள்ள மாக்வலிம் கார்க்கியைப் பற்றித் தமிழ் அன்பர்கள் அறிவார்கள்.
     கார்க்கியின் கதைகள் கட்டுரைகள் பல தனித் தனியாகவும் புத்தக உருவிலும் தமிழில் வந்துள்ளன; வருகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
     கார்க்கியின் மேதையை உணர்த்தும் சிருஷ்டிகள் பலவற்றிலும் சிறந்தவை, தனித்தன்மை வாய்ந்தவை, கருத்தும் கலைநயமும் நிறைந்தவை, அவர் எழுதியுள்ள 'டேல்ஸ் ஆவ் இட்டலி’ யில் காணக்கிடக்கின்றன.
     சிருஷ்டியிலே மனிதன் உயர்ந்தவன்; மனித வாழ்விலே உழைப்பு உயர்ந்தது; தாய்மை புனிதமானது; மனித நலன்கள் போற்றுதலுக்குரியவை ; வாழப்பிறந்தவர்கள் மனிதர்கள்; மனித குலத்திற்கு நல்லது எண்ணி, சக மனிதர்கள் வாழ ஒத்துழைத்து அன்பு காட்டுவதன் மூலம் எல்லோர் வாழ்விலும் இனிமையும் வெற்றியும் நிலவச் செய்யலாம்; மனிதன் மகிழ்வுடன் வாழ மக்களிடத்திலும் உண்மை  உழைப்பிலும் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம் - இத்தகைய எண்ணங்களை வலியுறுத்தும் அழகிய சிறு கதைகள் இவை.
      கார்க்கி ஒரு கதையிலே குறிப்பிட்டிருக்கிறார்,
        'மக்களுக்கு நன்மை செய்வதைப் பார்க்கிலும் மகத்தான இன்பம் வேறெதுவுமில்லை. என்னை