பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை


கொலம்பஸ், செல்வங் கொழிக்கும் ஆசிய நாடுகளுக்குக் கடற்பாதையில் குறுக்கு வழி கண்டு பிடிக்க வேண்டுமென்று முயன்றான்.

உலகம் உருண்டை என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, மேற்கு நோக்கிச் சென்றால் கிழக்கையடையலாம் என்ற உண்மைக் கருத்தில் நம்பிக்கை கொண்டு அவன் புறப்பட்டான்.

மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் இடையே வழிமுழுவதும் கடலாக இருந்திருந்தால் கொலம்பஸ் நினைத்தது சரியாய் இருந்திருக்கும்.

ஆனால், இடையிலே அமெரிக்கக் கண்டம் இருந்தது. அதைக் கண்டுபிடித்த கொலம்பஸ், அதுதான் இந்தியா என்று நினைத்தான். அதற்கு இந்தியா என்று பெயரிட்டான். அங்கு வாழும் மக்களை இந்தியர்கள் என்று அழைத்தான்.

தான் கண்டு பிடித்தது இந்தியா அல்ல என்று அவன் தெரிந்து கொள்ள பல நாட்கள் ஆயிற்று. தான் கண்டு பிடித்தது பொன்வளமும் மண்வளமும் மிக்க புதியதோர் உலகம் என்று அறிந்துகொள்ளாமலே அவன் இறந்து போனான்.