பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

வரியும் குறைத்துக் கொண்டு மீதியை உரியவரிடம் வழங்கலாம் என்றும், அங்கு தங்குவோர் விவசாயத் தொழிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும், சிவப்பு இந்தியர்களை மதம் மாற்றப் பாதிரிகளை அனுப்பவேண்டும் என்றும், அவன் கண்டு பிடித்த நாடுகளில் அன்னியர்களையும், யூதர்களையும், மத விரோதிகளையும், புரட்சிக்காரர்களையும் அனுமதிக்கக் கூடாதென்றும் இன்னும் என்னென்னவோ குறிப்பிட்டிருந்தான்.

இந்த விவரமான அறிக்கையை அனுப்பி விட்டு அவன் தன் புதிய பட்டத்துக்குத் தகுந்தாற் போன்ற விலையுயர்ந்த ஆடைகளைத் தைத்துக் கொண்டான்.

தன் கப்பல் அதிகாரிகளில் சிலரையும் கூலிக்கு. அமர்த்திய ஆட்கள் சிலரையும், சிவப்பு இந்தியர்களில் அறுவரையும் சேர்த்து ஓர் ஊர்வலக் குழுவை உண்டாக்கினான். சிவப்பு இந்தியர்கள், அவர்கள் நாட்டு நாகரிகப்படி பறவைகளின் இறகுகளைத் தலையில் கட்டிக் கொண்டார்கள். மீன் எலும்பால் ஆகிய மாலைகளையும், தங்க ஆபரணங்களையும் அணிந்து கொண்டார்கள். கூடுகளில் அடைத்த பச்சைக் கிளிகளைத் தங்கள் கைகளில் தூக்கிக் கொண்டார்கள். போகும் வழியெல்லாம் அந்த விசித்திரச் சிவப்பு இந்தியர்களைக் காணக் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடினார்கள். சோர்டோலா நகர சபை கொலம்பசுக்கு ஒரு வரவேற்பளித்தது. அங்கு அவன் தன் மனைவியையும் தன் மக்களையும் கண்டு வாரியணைத்து முத்தமிட்டான். ஏப்ரல் கடைசி வாரத்தில் பார்செலோனா நகருக்கு வந்து சேர்ந்தான். அங்கு அரசாங்க அதிகாரிகளும், ஊர் மக்களும் ஒருமிக்கத் திரண்டு வந்து அவனை வரவேற்றார்கள்.

பேரரசர் பெர்டினாண்டும் பேரரசி இசபெல்லாவும் இருந்த சபா மண்டபத்திற்குள் கொலம்பஸ் சென்றான். அவர்கள் முன்னிலையில் மண்டியிட்டு அவர்களின் திருக்-