பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

யளித்தார்கள். முக்கிய குறிக்கோளாக, அந்தத் தீவுகளின் உள்ள மக்களை கிறிஸ்தவர்களாக்கவேண்டுமென்று கூறி அதற்காக ஆறு மதகுருமார்களை அவனுடன் அனுப்பிவைத்தார்கள். இந்தியர்களை நன்றாகவும் அன்பாகவும் நடத்த வேண்டும் என்றும் இதில், பெருங்கடல் தளபதி கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். சீன நாட்டின் பொன்மயமான கத்தே மாநிலத்திற்குக் கியூபாவின் வழியாகச் செல்ல முடியுமா என்பதை ஆராயும்படி அவர்கள் கொலம்பசைக் கேட்டுக்கொண்டார்கள்.

கொலம்பசின் இரண்டாவது பயணம் காடிச் துறை மூகத்திலிருந்து புறப்படுவதாயிருந்தது. கொலம்பஸ் காடிச் துறைமுகத்திற்கு ஜூலை மாதத் துவக்கத்தில் வந்து சேர்ந்தான். அவன் இந்தப் பயணத்திற்கு மிகப் பெரிய ஏற்பாடுகளைச் செய்தான். பதினேழு கப்பல்களை ஆயத்தப்படுத்தினான். ஆறுமாதத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்களைச் சேமித்தான். மாலுமிகளும், படைவீரர்களும், குடியேறி வாழ முன்வந்த மக்களுமாக ஆயிரத்து இருநூறுபேருக்கு அவன் பயிற்சியளித்தான். குடியேற்ற நாட்டில் தேவைப்படக் கூடிய ஆடுமாடுகளையும், விவசாயக் கருவிகளையும், கொத்து வேலைக்கு வேண்டிய சாமான்களையும், பிற தொழில்களுக்கு வேண்டிய கருவிகளையும், ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும், விதைகளையும் செடிகளையும் ஒன்று பாக்கி விடாமல் சேகரித்தான். அரசரும் அரசியும், நடப்பு விலையில் எல்லாப் பொருள்களும் கப்பலுக்கு வாங்கிக் கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருந்தார்கள். கோதுமை வாங்கிக் கட்டப்பட்டது. மாட்டிறைச்சியும் பன்றிக்கறியும் நிறைய வாங்கி, கெட்டுப்போகாமல் இருப்ப ற்காக உப்பில் ஊறவைக்கப்பட்டன. பீப்பாய்களில் திராட்சை மது வாங்கி நிரப்பப்பட்டது.

பதினேழு கப்பல்களில் மிகப் பெரிய கப்பலுக்கு முதற்பயணத்தில் உடைந்து போன சாண்டாமேரியாவின்