பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
97

வதற்குள், ஸ்பெயினிலிருந்து கப்பல்கள் புறப்பட்டு விட்டன. பின்னால் வந்து சேர்ந்தவனைத் தான் அரசர் மூன்று. கப்பல்களுடன் இஸ்பானியோலாவுக்கு அனுப்பி வைத்தார். பார்த்தலோமியோ கொலம்பஸ் நல்ல நிர்வாகத் திறமையுடையவன். அவன் தம்பி டீகோவுக்குப் பதிலாக முதலிலேயே அவன் வந்திருந்தால், இசபெல்லாவில் எழுந்த குழப்பங்களை மிகச் சுலபமாக சமாளித்திருப்பான்.

என்ன இருந்த போதிலும் கொலம்பஸ் சகோதரர்கள் ஸ்பானியர்கள் அல்ல; ஜினோவாக்காரர்கள்! அவர்கள் கண்டுபிடிக்கும் நாடெல்லாம் ஸ்பானியர்களுக்குச் சொந்தம். ஸ்பானியர்கள், இன உணர்ச்சி மிக்கவர்கள். அவர்கள் எப்படி ஜினோவாக்காரர்களுக்கு அடங்கி நடக்க இசைவார்கள். இதுதான் கொலம்பஸ் சகோதரர்களுக்கும் அவர்களுடைய வளர்ச்சிக்கும் தடையாக இருந்தது. கொலம்பஸ் இஸ்பானியோலாவில் இரண்டு தவறுகள் செய்தான். முதலாவது சிறிதும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாதி. தன் தம்பி டீகோவைத் தன் பிரதிநிதியாக நியமித்தது. இரண்டாவது ஓஜிடான்வையும், மார்கரிட் என்பவனையும், இஸ்பானியோலாவில் உள் நாட்டுக்குள் அனுப்பி வைத்தது. மனிதாபிமானமோ நியாய உணர்ச்சிகளோ இல்லாத அவர்கள் குடிமக்களின் பகைமையை மிக விரைவில் வளர்த்து விட்டார்கள்.

கொலம்பஸ் இல்லாதபோது மார்கரிட் என்பவன் செய்த கொடுமைகளைப் பற்றி யறிந்த டீகோ, அவனைத் தன் போக்கை மாற்றிக்கொள்ளும்படி ஓர் உத்தரவு அனுப்பியிருந்தான். தனக்கு உத்தரவிட அவன் யார் என்று கேட்டு, உத்தரவைத் திரும்பப் பெறும்படி எச்சரித்துக் கேட்டுக் கொண்டு இசபெல்லாவுக்கு வந்தான். உத்தரவு திரும்பப் பெறப்படவில்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவன், வேறு சிலரோடு பார்த்த