பக்கம்:கடல் முத்து.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஒன்று 93. அவள்-பவளக்கொடி விம்மி வெடிக்க வேளை கணித்துக் கொண்டிருந்த மார்பகத்தை அழுத்தித் தேய்த்தபடி தலை சுழலப் புயலிலே தடுமாறிக்கொண்டே காலடி எடுத்து வைக்க எத்தனம் செய்தாள். மறு விநாடி, கால் இடறத் தட்டித் தடுமாறியவளாகச் சாய்ந்துவிட்டாள்; நொடியிலே கண்ணிர்க் கண்களைக் கசக்கிக்கொண்டு மண்ணைப் பார்த் தாள்! மண் பிளந்துவிடவில்லைதானே? ஆனால், அவள்தான் பிளந்துபோளுள்! ‘ஆசைமச்சான்காரவுகளே! இப்பைக்கு நீங்க சொன்னது சாடாவும் சத்தியந்தானுங்களே?’ என்று சி ரி ப் பை த் தொடர்ந்து, கண்களின் சு டு நீ ைர யு ம் தொடர்ந்து கேட்டாள். தீக்கணப்பு ரோஜாப்பூவைக்கூடத் தீண்டுமா, என்ன? 'நான் இப்பச் சொன்னது ஒட்டுக்கும் ஆத்தா ராக்காயி பேரிலே ஆணைகட்டிச் செப்பின சத்தியமாக்கும்! என்னை நம்பு, புள்ளே!' சக்திவேல் ஆனந்தப் பெருக்கில் மிதந்து பேசினன். பலே, சவாசு!" பவளக்கொடி கண்ணிரும் கம்பலையுமாகிக் கூவிய வண்ணம் அட்டகாசமாகச் சிரித்தவளாக நடை தொடர்ந் தாள். புழுதி மண் பரத்திட்ட அந்தப் பாதிக் கிழிசல் துவாலையை லாந்தியவாறு சக்திவேலை அண்டினுள். "சக்தி வேல் மச்சான்ன, சக்திவேல் மச்சான்தான்!’ நயமாய்ப் பேசியவள், மறு இமைப்பில், விநயமாகவும் விதியாகவும் ஓங்காரமாய்ச் சிரிக்கலானள். அடுத்த கண் சிமிட்டலில் ஐயையோ!' என்று அலறிக் கதறலானள். இப்போது அவனை-முறைமச்சான் சக்திவேலை நேருக்கு நேராகப் பார்த் தாள்: பார்வையிட்டாள். உடன், கைக்கு மையாக அவன் தலைமுடிகளைப் பற்றியபடி, அட பாவி...! பழிகாரா...! காமப் பிசாசே! ஒரு பாவமும் அறியாத என்னை நயவஞ்சனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/102&oldid=764946" இலிருந்து மீள்விக்கப்பட்டது