பக்கம்:கடல் முத்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
கடல் முத்து

 தாள். கடந்த நினைவுகளை மீண்டும் எண்ணிப் பார்ப்பதில் தான் எவ்வளவு இன்பமிருக்கிறது!

றந்தாங்கி—பட்டுக்கோட்டை ரஸ்தாவில் அந்தச் சாயாக்கடை இருந்தது. டீ என்றால் டீ. அப்படி இருக்கும். முன்பெல்லாம்—அதாவது பவளக்கொடி ‘பெரியவள்’ ஆவதற்கு முன்னர் அவளே நேரில் நின்று சாயா பரிமாறுவாள். வாடிக்கைக்காரர்களுடன் குழந்தைபோல விளையாடுவாள்; கிளிமாதிரிக் கிள்ளை மொழியைப் பாங்காக உதிர்ப்பாள்: இளம் பூஞ்சிட்டுப் போன்று சிறகடித்துப் பறப்பாள். அவள் என்ருல் ஏனையோருக்கும் ஒரு அன்பு—மயக்கம்! அவள் மயக்க உரு!

பவளக்கொடி அலைகடலில் சேகரிக்கப்பட்ட முத்து, ஒளிபரப்பி ஒய்யாரமாய்த் திரியும் கடல் முத்து. பவளவாய் திறந்தால் முத்துக்கள் நகைக்கும்; கண் திறந்தால் வண்டுகள் ரீங்காரமிடும்; கன்னக் குழிவில் ரோஜா சிரிக்கும். அவள் காட்டு ரோஜா!

அவள் பக்குவமடைந்ததும் கடையில் மாற்றம் நிகழ்ந்தது, அவள் இப்போதெல்லாம் சாயா போட்டு நேரில் வியாபாரம் பண்ணுவது நின்றுவிட்டது. அதற்குப் பதில் அவள் உள்ளறையில் எல்லாம் தயாரித்து, ஒவ்வொரு ‘செட்’டாக வெளியே நீட்டுவாள். ஒவ்வொன்றையும் நிதானமாக வாங்கி வியாபாரம் செய்வாள் அவள் அம்மா.

நடேசன் அடுத்த பத்தாவது மைலிலிருந்தவன். காளைப் பருவம்: வயதின் பெரும் பகுதியைப் பர்மா—— ரங்கூனில் கழித்தவன். ஊரின் கற்றுச் சூழ்நிலைப்பாசி அவனைப் பற்றவில்லை.

அவன் பவளக்கொடியை முதலில் கண்டதுமே மனதை அவள் வசம் பறிகொடுத்துப் போனான். அவன் ஆணழகன்; அவள் பெண் பதுமை; அழகும் அழகும் பின்னின. பூங்கொடிக்குத் தாவிப் படரக் கொழுகொம்பு கிடைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/11&oldid=1184759" இலிருந்து மீள்விக்கப்பட்டது