பக்கம்:கடல் முத்து.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கடல் முத்து அவனும் தவித்தான்; துடித்தான். சேச்சி எழுந்திருக்க மாட்டாளா? குழந்தையின் அச்சன் எங்கே கிடக்கிருனே? பாவம்! அதற்கு ஞானப்பால் வேண்டாமே, பரமாரி அம்மே!' 'குட்டி வீரிடுகிறது... அது குழந்தை. குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானும்: ஒன்றே தானம்...! ஒன்றே குலம். . .ஒருவனே தேவன்! நினைப் பதற்கென்று இப்படிச் சில விதிகள்...! அவன் இப்பொழுது பச்சைமண் ணின் செப்பு வாயைத் தேடினன். ஆனல், அவன் திருஷ்டியில் பட்டதோ, பட்ட மரம் தளிர்த்த மாதிரியான செளந்தர்யமாய தரிசனம் ஒன்று. மெய்சிலிர்க்க, நினைவுகள் வீட்டுக்காரியிடம் தஞ்ச மடைய, நல்லவேளையாக, அவன் மெய் உணர்ந்தான் . க#ணப்பித்தமான குற்ற உணர்வுக்காகக் கழிவிரக்கம் கொண்டு, நேத்திரங்களை வேறுபுறம் திருப்பின்ை. அங்கே: யாரோ ஒரு "சிர்ப்பக்காரன் இன்னமும் அந்தக் காட்சியைக் கண்காட்சியாக்கி ரசிப்பதில் லயித் திருக் கிருனே...? எதிர் ஆசனப்பலகையில், தலையும், காலுமாக நீட்டிக் கிடந்த அந்தப் பெண்ணின்-அந்தத் தாயின் கால் மாட்டில் நின்றுகொண்டிருந்த அ ந் த இளவட்டம் , பிரயாணச் சாதனங்கள் வைப்பதற்குப் பயன்பட்டுப் பயன ளிக்க வேண்டிய பலகையின் விளிம்பலே இரு கைகளையும் ஊன்றி அணை கொடுத்தவனுகக் காட்சியளித் தான். அவனுடைய முகத்தில் நிழலாடிய மோக வெறி கூடுதல் அடைந்துகொண்டே இருந்தது. சே. . .! உடம்பில் உறைந்திருந்த தணிப்பு மாறி, குடு' உறைக்கவே, கனைத்தான் அவன். х

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/111&oldid=764956" இலிருந்து மீள்விக்கப்பட்டது