பக்கம்:கடல் முத்து.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தட்டி மம்மே டாரே! 1 # பத்திரிகையை அனுப்பினேன்?. . . நீ திருமண வாழ்த்துக்கூட அனுப்பவில்லையே? ஏன்?" அம்மான்!” என்று கூப்பிட்டாள் வத்சலை, கையில் பால் தம்ளர் வைத்திருந்தாள். கண்களில் கனவுகளைச் சுமந்திருந் தாள். மது மலரின் எழிலுக்கு வருணனையோ வக்கணையோ தேவையா, என்ன? முதல் இரவு. ஆத்திரம் பூக்கவில்லை; ஆதங்கம் குரல் கொடுத்தது: 'அம்மான், அன்றைக்கே உங்ககிட்டே கேட்கணும்னு நினைச் சேன். எப்போ பார்த்தாலும் நீங்க ஏன் பிரமை தட்டிப் போய் இருக்கிறீங்க? . . . உங்க கண் ரெண்டும் சதா கலங்கிப் போகுதே, ஏன் அம்மான்? . . .' மெய்மறந்த பரவசம் எய்தின்ை சொக்கலிங்கம். மோகப் பெருமயக்கம் அடைந்த பாவனையில் அவளை ஏறிட்டுப் பார்த் தான். கண்ணுமூச்சி ஆட்டத்திற்குத் துணைவர வத்சலையைக் கைதட்டி அழைக்கும் அழகைப் பார்த்தீர்களா? வத்சலை, என்னைப் பார்க்கிறபோது உனக்கு என்ன தோணும்?" "நீங்க என் தெய்வம் என்கிற ஞாபகம்தான்!” "அப்படியான, என்னேயே ஒரு ஜீவன் காப்பாத்திச் சுன்ன, அந்த உயிரைப்பற்றி நீ என்ன நினைப்பே?" தெய்வத்தைக் காத்த தெய்வம்னு நினைப்பேன்!” சரி, இந்தப் படத்தைப் பார்!’ அவன் நீட்டிய படத்தைப் பார்த்தாள் வத்சல. முகத்தில் சலனக்கோடுகள் எழும்பின. "இந்தா பார், இந்தக் கதையை-இல்லை-நிஜமாகவே நடந்த கதையைக் கேள்!” என்று சொல்லி, மாட்டிஞ்சியால் தான் பிழைத்து மறு பிறப்புக் கொண்ட விந்தை நிகழ்ச்சியை விளக்கிளுன் சொக்கலிங்கம். மீண்டும் அவன் சிந்தனை வசப் பட்டான். பிறந்த மண்ணை மிதிக்க எண்ணி, முதல் கணக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/128&oldid=764974" இலிருந்து மீள்விக்கப்பட்டது