பக்கம்:கடல் முத்து.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
கடல் முத்து

பவளக்கொடி விம்மினுள்: கிழவி கண் கலங்கி நின்றாள்.

அடிமுடியின்றி எண்ணங்கள் சிதலம் பெற்றன; சிதல மடைந்தவை பின் சேகரம் பெற்றன. சராசரங்கள் ஒய்வுற்ற சாமம். உறக்கமும் விழிப்புமற்ற நிலையுடன் பவளக்கொடி புரண்டு படுத்தாள். அதே சமயம் ‘பவளக்கொடி’ என்ற குரல் கேட்டது.

கனவு கண்டு விழிப்பவள் போலானாள் அவள். யார் குரல் அது? கதவைத் திறந்தாள். அங்கே நடேசன் நின்று கொண்டிருந்தான்.

‘மச்சான்——’

எத்தனையோ காலம் கனவு கண்ட இன்பத்திரளை ஒரு நொடிப்போதில் அனுபவித்துவிட்டது போன்ற நெடுமூச்சு—— இன்பப் பெருமூச்சு அவள் இதயத்தினின்றும் வெளிப்பட்டது.

பவளக்கொடி தேம்பினாள். மச்சான் இறந்ததாக மாமன் சொன்ன செய்தியை ஞாபகப்படுத்திக்கொண்ட அவளுக்கு அப்பொழுதே தேவனின் சூது புலனாயிற்று. செல்லியும் இதை உணரலானாள்.

‘பவளம்!’

‘மச்சான், உங்களைக் காணுவோமின்னு நினைக்கவேயில்லை. ‘என்னா சங்கதி?’

'நீங்க காயலிலே செத்துப்போனதா என் மாமன் வந்து சொன்னாரு. அதுக்கு ஒத்த மாதிரி நீங்களும் கடுதாசிகூட எழுதல்லே. இப்பத்தான் அவரு தந்திரம் விளங்குது. இப்படிப் புரளி பண்ணி என்னை அவரு கட்டிக்கிறதுக்குப் போட்ட திட்டம் இது——’

‘பவளக்கொடி, நான் காய்ச்சலிலே பிழைச்சது மறு பிறப்புத்தான். அதாலே காகிதம் போட வாய்க்கல்லே. ஆனா உன் மாமன் இப்படித்தான் தீவினை பண்ணுவாருன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/17&oldid=1181854" இலிருந்து மீள்விக்கப்பட்டது