பக்கம்:கடல் முத்து.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிர் 每互 விழுங்கிளுள் அவள். இகலோகத்திலே பரலோகப் பரம் பொருளைத் தரிசிக்க க்யூ நிற்கும் பக்தன் தன் பிரார்த்தனை ஈடேறக் கருணைபுரிய வேண்டும் என்று யாசிப்பதுபோலக் காவேரி இரக்கப் பார்வையுடன் மேஸ்திரியைப் பார்த்தாள். சீ, பிச்சைக்கார நாயே! பொய்வேறே சொல்லியா ஆளே ஏமாத்தப் பார்க்கிறே. பாவமாச்சேன்னு பார்த்தாக் காலமில்லே பாரு. உன் கையில் இருக்கிற சோருகிலும் நிலைக்கணுமின்ன இப்பவே ஓடிடு, இல்லாத போனல்...” அடியுண்ட நாகம்போலச் சீறின்ை அவன். உண்மையைத் தானே காவேரி சொன்னுள்? ஆளுல் ஏழை சொல் அம்பலம் ஏறுமா? ஏழைப்பட்டுக் கோழைப்பட்ட அந்தப் பிச்சைக்காரி 'தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிடைத்த உணவுடன் ஒட்டமும் நடையுமாகச் சென்ருள். வழியில் மழை வேறு பிடித்துக்கொண்டது. இடியும் மி ன் ன லு ம் பின்னிப் பிணைந்தன; வெந்த இதயம் வேதனைப்பட்ட நிமித்தம் இயற்கை காட்டிய அனுதாபமா? அவள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை. ஆசை மச்சானும் அன்பு மகளும் அவளுடைய கனவின் விழிப்பில் மிதந்து சுழன்றனர். குளிரில் நடுங்கியவாறு குழந்தையை அணைத்துக்கொண்டு வேலன் நின்றிருந்தான். - "மச்சான் சோறு கிடைச்சது, பார்த்துக்குங்க. மரத்து ஒண்டலிலே சட்டி இருக்கு, நான் ஒட்டமாப் போய்த் தண்ணி கொண்டாரேன்” என்று விரைந்தாள். ஆனல் தண்ணிருடன் திரும்பியதும் காவேரி கண்ட காட்சி புலன்க ளனைத்தையும் ஒடுங்கச் செய்துவிட்டது! ஐயையோ! பூராச் சோத்தையும் நாய்க்குட்டி தின்னு முடிச்சுட்டுதே. . . . சட்டியைக் காலிசெய்த பூரிப்பால் நாய் மெல்ல நகர்ந்தது. அவளுக்கு நாய்மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/50&oldid=765023" இலிருந்து மீள்விக்கப்பட்டது