பக்கம்:கடல் முத்து.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை உள்ளம் ‘செல்லம்மாவுக்கு உடம்பு மட்டும் குணமாயிருந்தா, மற்றப் பிள்ளைங்க மாதிரி எவ்வளவு குதூகலமா ஆடிப்பாடி விளையாடும்!" பக்கத்தில் க ண் ணு மூ ச் சி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டதும், சிங்காரத்திற்கு அந்த ஒர் எண்ணம் மாறி மாறித் தோன்றியது. மரம் செதுக்கிச் சீர் பண்ணிக்கொண்டிருந்த அவனுக்கு மேலே வேலை ஒடவில்லை. அவன் கண்களின் ஓரத்தில் கண்ணிர் பரவியது. 'உடம்பு காயலாக் கிடக்கும் மகளை விட்டுப்பிட்டு ஏதுக்கு வேலைக்கு வரணும்? வந்தபுறம் மனம் நொந்து ஏன் இம்பிட்டுத் துடிதுடிக்க வேணும்?' என்று வேறு சிந்தித்து மூளையைக் குழப்பிக்கொண்டான் சிங்காரம். அவன் நினைவுப் பிரகாரம் அன்றைக்கு வேலைக்கு வராம லிருந்திருக்கலாம்; ஜூரமடித்துக் கிடக்கும் கண்ணுன மகளின் அருகில் இருந்து வேண்டியதைச் செய்து, மனத்திற்கு அமைதியை ஓரளவு தேடிக்கொண்டும் இருக்கலாம். ஆளுல், அன்றையப் பொழுதைக் காலதேவன் தன் கைப்பிடியி னின்றும் நழுவவிட்டாக வேண்டுமல்லவா? பணத்துக்கு என்ன செய்வது? . . தினம் தினம் ஏதாவது வேலை செய்தால்தான் அவனுக் கும் மகளுக்கும் சாண் வயிற்றைக் கழுவி மூடமுடியும். செல்லம்மாவுக்குக் காய்ச்சல் விஷம்போல ஏறியிருந்ததால் முந்தின நாள் வேலைக்குப் போகவில்லை. அதன் பலன் அன்று சாப்பாட்டிற்குத் திண்டாட்டமாகிவிட்டது. இந்த இக்கட் டான நிலையே சிங்காரத்தைக் காலையில் வேலைக்குச் செல்லத் துாண்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/53&oldid=765026" இலிருந்து மீள்விக்கப்பட்டது