பக்கம்:கடல் முத்து.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை உள்ளம் 47 போட்டிருக்கும் அந்தச் சரட்டை வித்துப் பணத்தைக் கொடு இல்லாட்டி அந்தச் சரட்டைக் கடனுக்கு என்னிடம் கழற்றிக் கொடு கொஞ்ச நஞ்சம் குறைஞ்சாலும் பரவா யில்லை. கடன் கழிஞ்சாக் காற்றுப்போல...' - நெருப்பைத் தீண்டியவன் மாதிரி திகைத்துவிட்டான் சிங்காரம். - - "ஐயா, உங்க கடனை எப்பாடு பட்டுத் தலையை அடகு வச்சாகிலும் கொஞ்ச நாளிலே கட்டிப்பிடுறேனுங்க. பொறுத்தது பொறுத்திட்டிங்க. இன்னும் கொஞ்சம் பெர்றுங்க. உங்க பிள்ளை குட்டிங்க நல்லாயிருக்கும். ஆன மகள் சரட்டை மட்டும் உயிர் போனலும் கழற்றமாட்டே னுங்க. . .' கண்ணிரை விலக்கிக்கொண்டான் சிங்காரம். செல்லம் மாவின் கழுத்தைவிட்டுச் சரட்டை அகற்ற அவன் பஞ்சை மனம் சம்மதிக்கவில்லை. காரணம், அச்சரடு மரணப் படுக்கையில் உழன்ற அவன் மனைவி தன் ஞாபகார்த்தமாக என்றும் இருக்கவேண்டுமென்று ம க ளு க்கு ப் பூட்டிய ஆபரணம் அது. ஆளுல் மேஸ்திரிக்கு இதில் ஏதோ சூது இருப்பதாகத் தோன்றவே கோபம் கொந்தளித்தது. அயோக்கியன்! இன்று பொழுதுக்குள் கடன் பட்டு வாடா ஆகிப்போடனும் இல்லாவிட்டால் நாளை விடிவதற் குள் உன் குடிசை பறிபோயிடும்! ஜாக்கிரதை' - தகப்பனுக்கும் மேஸ்திரிக்கும் நடந்த சம்பாஷணை பூராவையும் ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த செல் லம்மாவுக்கு அழுகை பீறிட்டது. - அப்பா, எதுக்காக இம்பிட்டு யோசனை பண்றிங்க? மூச்சு விடாமே என் சரட்டை அந்த ஐயா கிட்டக் கொடுத்துக் கடனை அடைச்சுப்பிடுங்க. பெரிய மனுசங்க பொல்லாப்பு நமக்கு ஏன்? நமக்கும் ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நல்ல காலம் பிறக்காமலா போயிரும்? அப்போ வேறே ஒரு சரடு செஞ்சுக்கலாம்...' என்பதாக விக்கலுக்கும் விம்மலுக் கும் மத்தியில் கூறினுள் செல்லம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/56&oldid=765029" இலிருந்து மீள்விக்கப்பட்டது