பக்கம்:கடல் முத்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிகை 器5。 விேடுகிறேன். அன்று அக்கினி சாட்சி'யாக வரித்துக் கரம்பற்றிய என் பதி, தங்கள் டைரக்டர், தாங்கள் விரித்த மாயவலையில் சிக்கிவிட்டார் என்பது சில்: தினங்கள் முன்னர்தான் தெரியும். கோபிக்காதீர்கள். நைந்துபோன என் இடிந்த இதயத்தின் சோகக் குமுறல் கள்தான் இவை. ஆனல் இந்த அபலை உங்களிடம் காதல் பிச்சை மட்டுமே வேண்டி நிற்கிறேன். என் கணவரைத் தயவுபண்ணி என்னிடம் வந்து சேர உதவிபுரியுங்கள். அன்று பிரிந்த அவர் பிரிவை இனியும் சகிக்க முடியாது. கண் நிறைந்த கணவனின் கனிவு முகத்தை ஒருதரமேனும் தரிசித்துத் தாலி பாக்கியம் பெற அருள் புரியுங்கள். மண்டியிட்டு மன்ருடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். இதுவே என் தாழ்ந்த வேண்டுகோள். லகஷ்மி, அத்துமீறிச் சுழன்ற நடிகை மாயாவின் மனத்திரையில் டைரக்டருடன் பழக்கம் ஏற்பட்ட நாட்களின் முக்கிய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்ருகச் சினிமாப் படம்போல் ஒடலாயின. அதுவரை டைரக்டர் கல்யாணமாகாதவர் என்றே நம்பியிருந்தாள். அப்படித்தான் ஆரம்ப முதல் அவரும் உறுதி சொல்லிவந்தார். ஆனல்...! அதே தருணம் தோட்டத்தின் மரக்கிளை யொன்றி லிருந்து கூண்டினுள் சிறைபுகப் போகும் குயிலின் சோக கீதம் காற்றில் மிதந்து வந்தது. மாயா திகைத்தாள். உள் ளத்தை வெளிக்காட்டிய மதுரமோகன கீதத்தின் பண்பாட் டில் டைரக்டரின் கைபிடித்த மனைவியின் ஒடிந்த உள்ளத் தின் அவல ஒலம் எதிரொலிப்பது போன்ற பிரமை எழுந் தது அவளுக்கு. கைகோர்த்த புருஷன்-மனைவியரிடையே நிலவவேண்டிய மனமொன்றுபட்ட பாந்தவ்யம்-அன்பின் இணைப்பில் உருவகிக்கும் பாசத்தின் பின்னல் அறுந்து போய்விடக் காரணம் அவளே என்பதை உணர்ந்த மirயா வின் இமைவட்டங்களில் விளிம்புக் கோடிட்ட நீரை மெல்ல ரோஜா விரலால் துடைத்தாள். . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/64&oldid=765038" இலிருந்து மீள்விக்கப்பட்டது