பக்கம்:கடல் முத்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிகை 57 சந்தர்ப்பத்தை வகுத்து, தனது வாழ்வின் எதிர்காலத்திற்கு ஸ்திரமிடுவதென்பதே அவளுடைய அந்தரங்கம். ஒன்று. பத்து, நூறு, ஆயிரமாகச் சிந்தனைகள் பெருகி அதன் நடுவில் சஞ்சரித்த டைரக்டருடைய மூளை குழம் பிற்று. காலம் கடந்து மாயாவும் ஜோதிநாத்தும் காரி விருந்து இறங்கி ஸ்டைலாக ஒயிலுடன் நடந்து உள்ளே நுழைவதைக் கண்டதும் சந்திரமெளலியின் கோபம் சுடர் தெறித்தது. ஏற்கெனவே புது நடிகரைப்பற்றிக் கொண் டிருந்த சந்தேகப் பொறி ஜ்வாலையிட்டது. கண்மூடி கண் திறக்கும் நேரம் சிந்தித்தார். இதே ரீதியில் மாயா ஜோதி நாத்திடம் படம் பிடித்தாகும் வரை பழக நேரிட்டால் ஒரு வேளை தன்னை நிராகரிக்கவும் நேரிடலாம் என்ற ஐயம் அவர் மனதைச் சாறு பிழிந்தது. அப்புறம் திரையுலகில் தன் பெயர். ...? என்றும் மாயா தன் ஏகபோக உரிமை என்பதாய்க் கனவு கண்டு வந்தவர் டைரக்டர். ஆனல் அந்தக் கடிதம். . . .? புது நடிகரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்து விட்டு, மிஸ்டர் ஜோதிநாத்! எங்கள் புதுப் படத்தின் 'அக்ரிமெண்ட் டிவிருந்து உங்களை விலக்கிவிட்டேன். மன் னிக்கவும் என்று எடுத்த எடுப்பிலேயே டைரக்டர் மொழிந்ததைக் கேட்ட மாயா திடுக்கிட்டு மலைத்துப் போனுள், புது நடிகரும் ஸ்தம்பித்தார். இத்தகைய திடீர் மாறுதலின் காரணத்தை அனுமானித்தாள் மாயா. டைரக்டர் ஸார், இப்பொழுது நன்ருகப் புரிந்து விட்டது உங்களின் கபடநாடகம்-வெளிப்பூச்செல்லாம். நான் உங்களுக்குப் பாத்யதை அற்றவள் என்பதை நான் உணர்ந்துகொண்டு-என் மனசாட்சி அறிவுறுத்தி-நாட் கள் பல ஆகப்போகின்றன. ஜோதிநாத் உங்கள் கண்ணே உறுத்திக் கொண்டேயிருந்த ரகசியத்தையும் நான் அறியாம வில்லை. ஆனால் உங்களுக்கு, முன்பே மணம் புரிந்துவைத்த துணைவி ஒருத்தி உண்டென்பதை இதுகாறும் மறைத்து வைத்து ஏமாற்றியது ஆச்சரியமே. உங்களைக் கைபிடித்த மனையாள் பொழியும் துயரக் கண்ணிரின் அடித்தளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/66&oldid=765040" இலிருந்து மீள்விக்கப்பட்டது