பக்கம்:கடல் முத்து.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஒன்று & "பிலே, சவாசு...!" மணமும், சுவையும் கூடிக் குலவிய அந்த மல்கோவா மாம்பழத்தை அவசரமும், ஆத்திரமுமாகக் கடித்துச் சுவைத்து. ஆசை ஆசையாக அநுபவித்து மகிழ்ந்த பரவசக் குதுகலத்தோடு நெஞ்சம் பதை பதைக்க விம்மிக்கொண்டே சிட்டாகப் பறந்தோடி வந்த சக்திவேல், உலகாளும் ராக்காச்சி ஆத்தாளின் திடல் வந்ததும்தான் நின்ருன்; நல்ல மூச்சு விட்டான்! நின்றவன் சிலையானன்! ஏன் அப்படி மேனி சிவிர்த்திட நின்ருன்? பாவம் . . . t இப்போது அந்தி மயங்கியது. ஆளுல் . . . அவன்-சக்திவேல், மயங்கவில்லைதான்! இனிமேலும் ஏன் மயங்கப் போகிருன் அவன்? அவனுடைய ஆசை ஆசை யான மயக்கம்தான் மயங்கி விளையாடி இப்போது தெளிந்து விட்டதே! கீழ் வசத்திலே பார்வையை வலை விரித்தான். அவன் வலையிலே ஆத்தாள் ராக்காச்சி மட்டிலும் விழாமல் தப்பிவிட முடியுமாக்கும்? அரைக்கணம் அவன் சிரித்தான்; தன்னை மறந்துதான் சிரித்திருப்பானே? நான் ஒண்னும் கொக்கு இல்லே! நான் சக்திவேலாக்கும்! அதாலேதான், நான் நினைச்சதை நானே முடிச்சிப்பூட்டேன்...! என்ளுேட அடி நாளையக் களு கொஞ்சமுந்தி பலிச்சிடுச்சு...! இனிமே என் மட்டுக்கும் என்ைேட உசிர்கூடத் துச்சம்தான்...! ஆமா, ஆத்தர் ராக்காச்சி மேலே ஆன வச்சுத்தான் செப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/92&oldid=765069" இலிருந்து மீள்விக்கப்பட்டது