பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா டி 3. நடையும் விடையும் , \ . . . . . . . . . . . . . . . . . . சி வழியெல்லாம் வைரக்கற்களின் மதிப்பைப் பற்றியே நடேசனின் மனம் நினைத்துக் கொண்டிருந்தது, பாரவண்டிகளே இழுத்துப்போகும் கிழட்டு மாடுகளைப்போல அவரது நடை இருந்தது. விலைமதிக்க முடியாத வைரக்கற்கள் பல லட்சம் பெறும். இவற்றை வீணே பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறாரே! தருமலிங்கத்து குடும்பத்தின் சொத்து அப்படி எவ்வளவு இருக்கும்? அவரது செழுமை எங்கே? அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கு ஆளாய் பறக்கும் தன் குடும் பத்தின் வறுமை நிலை எங்கே? 'ஏணி வைத்தாலும் எட்டாது. பாடுபட்டாலும் பற்றாது என்று நடேசன் மனம், பஞ்சப்பாட்டைப் பாடியவாறு இருந்தது. சில சமயங்களில் பதறியது.