பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடவுள் கைவிட மாட்டார் - - 51 'முடியாது' என்று ஆற்றுப் படிக்கட்டில் இருந்த ஏகாம்பரம் அலறினான். 'அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்' என்று கரையில இருந்த முத்தையா, பொட்டலத்தை மடித்து, மடியில் வைக்க ஆரம்பித்தான். ‘எங்கே தன்னை ஏமாற்றி விட்டுப் போய் விடப் போகிறானோ என்று படிக்கட்டில் நின்ற ஏகாம்பரம் பதறிப் போய், கரைக்கு வந்து, முத்தையாவின் கையைப் பிடிக்க, பொட்டலம் கீழே விழுந்து விட்டது. ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, பொட்டலத்தை எடுக்கப் போய் கட்டிப் புரண்டார்கள். தடுத்தார்கள் கையைப் பிடித்து மடக்கினார்கள். அது பயங்கர மல்யுத்தமாக மாறியது. ஒருவரை ஒருவர் கொல்ல முயல்வது போல தாக்கிக்கொண்டார்கள். ஆற்றின் கரை சரிவாக இருந்ததால் கரையிலிருந்து இருவரும் கட்டிப் புரண்டபடி, ஆற்றில் விழுந்தார்கள். ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஒடிக்கொண்டிருந்தது. யாரும் கரையேறாதபடி இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாகப் பிடித்து மடக்கிக் கொண்டார்கள்.