பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
138
 


மைந்தருடன் மாறுகொண்டான். ஏதோ ஒரு குறிக் கோளுக்காக வடக்கிருந்தான். (வடக்கிருத்தல்=வட திசை நோக்கியமர்ந்து உயிர் போகும்வரை உண்ணா நோன்பு கொண்டிருத்தல்...) அவன்பால் பேரன்பு கொண்ட பொத்தியார் என்னும் புலவர் தாமும் அவ னுடன் வடக்கிருக்கச் சென்றார். அப்போது புலவரின் மனைவியார் நிறை சூல் கொண்டிருந்தார் போலும்! எனவே, பிள்ளை பிறந்த பின் வா எனக்கூறி மன்னன் புலவரை அனுப்பி விட்டான். பிள்ளை பிறந்தபின் புலவர் வருவதற்குள், மன்னன் மாண்டுவிட்டான். குறிக்கோள் வீரனான மன்னனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. பொத்தியார் வந்து மன்னனது நடுகல்லைக் கண்டு தமக்கும் இடம் கேட்டார். நடுகல் சிறிது விலகிக் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே புலவர்க்கும் இடம் கொடுத்ததாம். அஃதாவது பிறகு புலவரும் வடக்கிருந்து உயிர் நீத்திருக்கவேண்டும்-அவருக்கும் சோழனது நடுகல்லின் அருகிலேயே நடுகல் எடுத்திருக்கவேண்டும் என்பது புலனாகும்.

இச்செய்தியைப் புறநானூற்றுப் பாடல்கள் (221, 223) புலப்படுத்தும். அவை முறையே வருக:

‘வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலகம் அரங்தை தூங்கக்
கெடுவில் கல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே (221)

‘பலர்க்கு கிழலாகி உலகமீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடக்கி
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடங்கொடுத் தளிப்ப மன்ற உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட்பு உடையார் தம்முழைச் செலினே (223)