பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


31 உரோம நாகரிகத்திற்கும் முற்பட்டது. உலகத் தையே கட்டியாண்ட உரோமானியர்கள் எகிப்து நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்த பொழுது, அங்கு விண்ணேயிடித்து நிமிர்ந்து நின்ற பிரமிடு களையும், மாபெரும் கோவில்களையும், கலைநுணுக் கம் மிக்க சிற்பங்களையும், வானளாவிய அழகுத் துரண்களையும் கண்டு வியப்படைந்தனர். அவ் வழகுச் சின்னங்களைத்தான் அவர்களால் காண முடிந்ததே தவிர, அம்மாபெரும் நாகரிகத்தின் சிற்பி களான அம்மக்களைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை. உரோமானியர்கள் காலடி வைப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் பாகவே அந்நாகரிகம் அழிந்துபட்டது. எகிப்து நாட்டு நாகரிகச் சின்னங்களை நேரில் கண்டு வியந்த பண்டைக் காலத்து மக்கள், 'இந் நாகரிகம் மிகவும் பழமையானது. இந்நாகரிகத்தை உருவாக்கிய மக்கள் கட்டடக் கலையிலும், சிற்பக் கலையிலும் வல்லவர்கள்; பாறைகளைப் பிளந்தெடுப் பதிலும், பளுவான பெரும் பொருள்களை இடம் பெயர்த்துக் கொண்டு செல்வதிலும், பெரும் பாறை களை ஒன்றன்மேல் ஒன்ருக அடுக்கி மலைபோன்ற கோபுரங்களே எழுப்புவதிலும் ஆற்றல் படைத்தவர் கள்!” என்று மட்டுமே எண்ணியிருந்தனர். ஆளுல் இந்நாகரிகத்தின் தலைவர்களான பாரோ மன்னர் களைப்பற்றியும், அவர்கள் சிறப்புக்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாத நிலையில் இருந்தனர். இருபதாம் நூற்ருண்டு மக்களான நாம், உரோ மானியர்களைவிட இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்