பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


பிரதி செய்தவர் எனது அருமை நண்பர் ஓணமாக்குளம் பெருமாள். இத்தகைய நூலைப் பிரதி செய்வதற்கு அவர் காட்டிய பொறுமையும், எடுத்துக் கொண்ட முயற்சியும் பெரிதும் பாராட்டத்தக்கது. அவரே தெலுங்கு பேசுபவராதலால் தெலுங்குப் பாடல்களை இசை தவறாது மொழி பெயர்த்துள்ளார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

அடிக் குறிப்புகளுக்கு நானே முழுவதும் பொறுப்பேற்றுக் கொள்ளுகிறேன். எனது நண்பர் ஓணமாக்குளம் பெருமாள் கோவில்பட்டி பகுதியில் தெலுங்கு பேசும் மக்களிடையே வழங்கும் கொச்சைத் தெலுங்குச் சொற்களின் பொருளையும், தமிழ்ப் பழமொழிகளின் பொருளையும் எனக்கு அறிவித்ததற்கு அவருக்கு எனது நன்றி.

பாளையங்கோட்டை நா. வானமாமலை

16-10-70 பதிப்பாசிரியர்