பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

 தருணத்தில் கம்பர் கூறுவதையும் நினைவிற்குக் கொணரலாம். "எக்குலத்து யாவருக்கும் வினேயினால் வரும் மேன்மையும் கீழ்மையும்" என்பது அவரது கூற்று. "உத்தியினால் எல்லோரும் ஒக்குமென ஒண்ணாதே" என்பது தினகர வெண்பா,

செயற்கரிய செம்மையான செயல்களைச் செய்யாமல் செல்வத்தின் உயர்வு காரணமாக விலை உயர் படுக்கை, ஆசனம் முதலியவற்றில் படுத்தும் அமர்ந்தும் இருப்பவர்கள், ஒருகாலும் பெரியராகமாட்டார். வறுமையுற்றபோதும் செயற்கரிய செயலைச் செய்பவர் வறுமையுடையார் என்று அ றிவுடைப் பெரு மக்களால் கருதப்படமாடடார்.

இளையான் குடிமாற நாயனார் பெருஞ் செல்வத்தைப் பெற்றிருந்த போதிலும், தம் இல்லத்தில் அடியவர்களுக்கு உண்டியும் உறையுளும் தந்து உபசரித்து மேன்மை பெற்றார். பின்பு வறுமையுற்றபோதும், தம் செய்கையினின்றும் மாறாது உபசரித்து மேன்மையுற்றார் "அல்லல் நல்குரவு ஆனபோதிலும் வல்லவராய் விளங்கினார்." ஆகவே, பெருமையுடையவர் என்பதற்கு அறிகுறி செல்வமோ, குடிப்பிறப்பே காரணம் அன்று செயலே இன்றியமையாதது. மனை, மாடு, பொருள், பூமி முதலியவற்றால் பயனில்லை. குலம், ஒழுக்கம், குணம், ஞானம் முதலியன மக்களுக்குத் தேவை. இவை இல்லார் மிகவும் சிறியரினும் சிறியரே.

நக்கீரர் சங்கப் பலகையின் மேல் வீற்றிருந்து பெரியர் ஆகிவிட்டனரோ? சிவனார் அப்பலகையில் நிற்றல் இன்றி அவர் முன் கீழே, நின்று இருந்ததனால் சிறியர் ஆகிவிட்டனரோ ? நக்கீரர் பெரியர் ஆயிலர், சிவனார் சிறியர் ஆயிலர.

'சங்கரன்போய் நின்றளவில் சங்கப் பலகையின்மேல்
அங்கிருந்தான் மக்கீரன் ஆயினும் என்‘’