பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


செய்யும் ஈகை மறுமைக்குப் பயன் தரவல்லது என்று நினைத்துச் செய்யும் ஈகையன் அலலன். யாசகர்களின் வறுமை நோக்கி அவ்வறுமை தீரக் கொடுத்தல் முறையென்பதை உளங்கொண்டவன். "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்னும் பண்பு வாய்ந்தவன். இதனை அழகுபடப் பரணர்,

கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈத்தல் நன்றென
மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின் றவன் கைவண் மையே.

என்று நமக்கு அறிவுறுத்துவார் ஆயினர். ஆகவே, இவன் கொடைமடம் படுபவனே அன்றிப் படை மடம் படான் என்று இவன் கொடையினைப் புகழ்ந்தார்.

ஒரு முறை பரணர் பேகனைக் கண்டு பொற்றாமரையணியினையும், பொன்னரி மாலையினையும் பெற்றுத் தாம் விறலியுடன் ஒருசுரத்திடையே இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அதுபோது ஓர் ஏழை இரவலன் இவரைக் கண்ணுற்று ,'ஐயன் மீர், நீவீர் யாவீர்?" என்று கேட்டனன். இங்ஙனம் வினாவிய அவனை நோக்கி, "ஐயா யானும் உன் போல் ஓர் இரவலன். யான் பேகன் என்பானைக் காணுதற்கு முன், நின்னைப் போலவே வறுமைக்கோர் உறைவிடமாக இருந்தனன். அவனைக் கண்டதும் என் மிடி தீர்ந்தது. அதன் பின் இங்ஙனம் பூண்களைப் பூண்டு பொலிவு பெற்றனன். அப்பேகன் கரியும் பரியும் பெற்றுக் கண்ணியமாய் வாழ்பவன், தான் கொடுக்கப் போகும் போர்வையை உடுத்திக் கொள்ளாது என்பதை அறிந்தும் தன் பொன் ஆடையும் மயிலுக்குப் போர்த்த புண்ணியன்" எனக்கூறி ஒருபாணனை ஆற்றுப்படுத்திப் பேகனதுகொடைக் குணத்தைச் சிறப்பித்தனர்.