பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தற்கும் பெருங்காரணர் சீத்தலைச் சாத்தனார் என்பதை அறிந்து நாம் இன்புற வேண்டியவராகின்றோம்.

சாத்தனார் பெரும் புலவராக இருந்தும், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் மிகுந்த ஈடுபாடு உடையவராய் இருந்தார் என்பதை முன்னர்க் கண்டோம். திருவள்ளுவரிடத்திலும், அவர் செய்த நூலிடத்திலும் இவர் கொண்டிருந்த மதிப்பு இவர் எழுதியுள்ள நூலில் சமயம் வந்தபோது, திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழ்ந்து பேசுவதிலிருந்து நன்கு உணரலாம். திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் என்று கூறிப் போற்றுகிறார். திருக்குறளைப் 'பொருள் உரை' என்று புகழ்கிறார். திருக்குறள்களில் ஒரு குறளை எடுத்து ஓர் எழுத்தும் ஒரு சொல்லும் சிதையாதவாறு தம் நூலில் அமைத்தும் பாடியுள்ளார். அதுவே, மணிமேகலையில் சிறை செய் காதையில்,

'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருள்உரை தேருப்"

என்று கூறப்பட்டதாகும். சீத்தலைச் சாத்தனார்க்குத்_திருக்குறளினிடத்தில் இருந்த பெருமதிப்புக்கு மேலே காட்டிய சான்று மட்டும் போதாது. நாடு, மலை, நதி, ஊர், முரசு, தமிழ், கொடி, ஊர்தி முதலிய ஒவ்வொன்றும் மும் மூன்றாகப் பெற்றிருந்தாலும் முப்பாலாகிய திருக்குறள்தான் மன்னர்கட்கு முடியில் மாலையாக விளங்க வல்லது என்பதை,

"மும்மலையும் முங்காடும், முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும்-மும்மாவும் தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார் அன்றோ பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்’

என்று பாடியுள்ள பாராட்டுரையைப் பாருங்கள். இதன்பொருள், "இக்குறள் கொல்லிமலை, நேரிமலை,